தமிழகத்தில் ஜூலை 29 மின்தடை ஏற்படும் பகுதிகள் – மின்வாரியம் அறிவிப்பு!
தமிழகத்தில் திருவானைக்கா பகுதியில் நாளை (ஜூலை 29) மின் பராமரிப்பு பணிகள் காரணமாக காலை 9 மணி முதல் 5 மணி வரை மின் விநியோகம் தடை செய்யப்படும் என மின்சார வாரியம் அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.
மின்தடை பகுதிகள்:
தமிழகத்தில் மாதம் ஒரு முறை அனைத்து பகுதிகளிலும் உள்ள மின் நிலையங்களில் ஊழியர்கள் மூலம் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மின் கம்பிகள் மாற்றுவது, மின் இணைப்புகள் சரிபார்ப்பு போன்ற பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன் மூலம் பாதுகாப்பான தடையில்லா மின்சாரம் கிடைப்பது உறுதி செய்யப்படுகிறது. கடந்த மாதங்களில் மின் பராமரிப்பு பணிகள் காரணமாக அதிக நேரம் மின்தடை செய்யப்பட்டு வந்தது. இது குறித்து பல்வேறு தரப்பினரும் புகார் அளித்து வந்தனர்.
Airtel வாடிக்கையாளர்களுக்கு முக்கிய அறிவிப்பு – புதிய ரீசார்ஜ் திட்டம் அறிமுகம்!
மற்ற மாவட்டங்களை தொடர்ந்து நாளை திருவானைக்கா சன்னதி வீதி, ஒத்த தெரு, சீனிவாச நகர், அம்பேத்கர் நகர், நெல்சன் சாலை, நரியின் தெரு, காந்தி சாலை, ராகவேந்திரா கார்டன், பஞ்சக்கரை சாலை, சிவராம் நகர், அருள் முருகன் கார்டன், அகிலா நகர், பனையபுரம், திருவெண்ணைநல்லுர், தாகூர் தெரு, உத்தமர் சீலி , பொண்ணு ரங்கபுரம், ஜம்புகேஸ்வரர் நகர், ஆகிய பகுதிகள்.
TN Job “FB
Group” Join Now
மேலும் அதனை சுற்றியுள்ள பகுதிகளிலும் நாளை (29.07.2021) மின் நிலையத்தில் மின் பராமரிப்பு பணிகள் காரணமாக காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் தடை செய்யப்படும் என மின்வாரியம் தெரிவித்துள்ளது. பராமரிப்பு பணிகளுக்கு பிறகு வழக்கம் போல் எவ்வித தடைகளும் இன்றி மின் விநியோகம் இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.