தமிழகத்தில் நாளை (நவ.26) மின்தடை ஏற்பட உள்ள பகுதிகள் – மின்வாரியம் அறிவிப்பு!

0
தமிழகத்தில் நாளை (நவ.26) மின்தடை ஏற்பட உள்ள பகுதிகள் - மின்வாரியம் அறிவிப்பு!
தமிழகத்தில் நாளை (நவ.26) மின்தடை ஏற்பட உள்ள பகுதிகள் - மின்வாரியம் அறிவிப்பு!
தமிழகத்தில் நாளை (நவ.26) மின்தடை ஏற்பட உள்ள பகுதிகள் – மின்வாரியம் அறிவிப்பு!

தமிழகத்தில் மாதந்தோறும் பல்வேறு பகுதிகளில் மின்தடை அறிவித்து மின் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதனால் நாளை விக்கிரமங்கலம், தனியாமங்கலம் பகுதியில் மின்தடை ஏற்படும் என்று மின்வாரியம் அறிவித்துள்ளது.

மின்தடை அறிவிப்பு:

மின் கோளாறுகள், கசிவுகள் காரணமாக பல்வேறு விபத்துக்கள் ஏற்படுகின்றன. தற்போது பருவ மழைக்காலம் என்பதால் சாலைகளில் நீர் நிரம்பி வெள்ளப்பெருக்காக இருக்கின்றது. மேலும் சாலைகளில் மின் கம்பங்கள் சாய்ந்து விழுந்துள்ளன. அதனால் இரவு நேரங்களில் ஏராளமான விபத்துக்கள் ஏற்படுகின்றன. ஆதலால் தமிழக அரசு பாதுகாப்பு நடவடிக்கையாக ஒவ்வொரு மாதமும் மின் பராமரிப்பு பணிகளை முறையாக மேற்கொள்ள அறிவுறுத்தி உள்ளது. இதற்காக ஒரு குறிப்பிட்ட நேரம் செலவிட்டு மின் பராமரிப்பு பணிகளை தொடர்சசியாக முடித்து வருகின்றன. இதனால் அதிக விபத்துகள் ஏற்படுவது தடுக்கப்படுகிறது.

தமிழக அரசு சார்பில் 1 லட்சம் பேருக்கு ஓய்வூதியம் – புதிய திட்டம் துவக்கம்!

அதே போல் இந்த மாதம் விக்கிரமங்கலம், தனியாமங்கலம் ஆகிய துணை மின் நிலையத்தில் வெள்ளிக்கிழமை (நவ.25) மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. விக்கிரமங்கலம் துணை மின் நிலையத்தால் மின் விநியோகம் பெறும் பகுதிகளான காடுப்பட்டி, புதுப்பட்டி, கோவில்பட்டி, கீழபெருமாள்பட்டி, அய்யம்பட்டி, மேலப்பெருமாள்பட்டி, கிருஷ்ணாபுரம், மணல்பட்டி, அரசமரத்துப்பட்டி, பையத்தான், நரியம்பட்டி, பாண்டியன் நகா், கல்புளிச்சான்பட்டி, கொளத்துப்பட்டி, நடுமுதலைக்குளம், எழுவம்பட்டி, வடுகபட்டி, உடன்காட்டுப்பட்டி, கொடிக்குளம், ஜோதிமாணிக்கம் போன்ற பகுதியில் நாளை காலை 10 மணி முதல் பிற்பகல் 2 மணிவரை மின் தடை ஏற்படும் என்று சமயநல்லூர் செயற்பொறியாளர் ச.ஆறுமுகராஜ் தெரிவித்துள்ளாா்.

தமிழக அரசு ஆசிரியர்கள், அலுவலகப் பணியாளர்கள் கவனத்திற்கு – விரைவில் கலந்தாய்வு!

இதே போல் தனியாமங்கலம் துணை மின்நிலையத்தால் மின் விநியோகம் பெறும் பகுதிகளான தனியாமங்கலம், சாத்தமங்கலம், பெருமாள்பட்டி, வெள்ளலூா், கோட்டநத்தம்பட்டி, உறங்கான்பட்டி, தா்மதானப்பட்டி, குறிச்சிப்பட்டி, வெள்ளநாயகம்பட்டி, பெருமாள்பட்டி, சருகுவலையபட்டி, இ.மலம்பட்டி, கரையிப்பட்டி, கொங்கம்பட்டி, செம்மினிபட்டி, முத்துச்சாமிபட்டி, கீழவளவு, கீழையூா் சுற்றுவட்டார பகுதிகளில் நாளை காலை 10 மணி முதல் பிற்பகல் 2 மணிவரை மின் விநியோகம் நிறுத்தப்படும் என்று மதுரை கிழக்கு மின்பகிர்மான வட்ட செயற்பொறியாளர் மு.ராஜாகாந்தி அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here