தமிழகத்தில் நாளை (நவ.25) மின்தடை ஏற்பட உள்ள பகுதிகள் – மின்வாரியம் அறிவிப்பு!
தேனி மாவட்டம் கண்டமனூர் பகுதியில் உள்ள துணை மின் நிலையத்தில் நாளை மின் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் மின்தடை செய்யப்படும் என்று மின்வாரியம் தெரிவித்துள்ளது. மின்தடை ஏற்படும் பகுதிகளை இப்பதிவில் காண்போம்.
மின்தடை:
தமிழகத்தில் மாதந்தோறும் தவறாது மின் பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. மின் பராமரிப்பின் போது மின் ஊழியர்களின் பாதுகாப்பிற்காக பணிகள் முடியும் வரை மின்தடை செய்யப்பட்டு வருகிறது. மின் பராமரிப்பு பணிகளின் போது சாலைகளில் மின்பாதைக்கு இடையூறாக உள்ள மரங்களின் கிளைகள் வெட்டபட்டு சரி செய்யப்படுகிறது. பழுதடைந்த மின் கம்பிகள், வயர்கள் மாற்றம் செய்யப்படுகிறது. தற்போது தமிழகம் முழுவதும் கனமழை பெய்து வருவதால் மின்கசிவு ஏற்பட வாய்ப்புள்ளதால் மின் ஊழியர்கள் மின் கம்பங்களில் மின் பாதுகாப்பிற்கு தேவையான பணிகளை மேற்கொள்ள அரசு உத்தரவிட்டுள்ளது.
திருப்பதி செல்ல திட்டமிடுவோர் கவனத்திற்கு – தரிசனத்திற்கு 6 மாதத்திற்குள் முன்பதிவு அவசியம்!
இந்த பணிகளுக்கு மத்தியில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகளும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. மின்தடை செய்யப்பட உள்ள பகுதிகள் குறித்து அந்தந்த பகுதி செயற்பொறியாளர்கள் மின் பயனர்களுக்கு முன்னறிவிப்பு செய்கின்றன. அதனால் மக்கள் மின்தடை குறித்து முன்னதாகவே அறிந்து வேலைகளை திட்டமிடுகின்றனர். மற்ற பகுதிகளை தொடர்ந்து நாளை (25.11.2021) தேனி மாவட்டம் கண்டமனூர் பகுதியில் உள்ள துணை மின் நிலையத்தில் மின் பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளது. அதனால் கீழ்க்கண்ட பகுதிகளில் காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை மின் விநியோகம் தடை செய்யப்படும் என்று மின்வாரியம் தெரிவித்துள்ளது.
மத்திய அரசு ஊழியர்களுக்கு அடிப்படை சம்பள உயர்வு? முக்கிய ஆலோசனை!
கண்டமனூர், அம்பாசமுத்திரம், ஸ்ரீ ரங்கபுரம், தப்புகுண்டு, ஜி. ராமலிங்கபுரம், சித்தார்பட்டி, கணேசபுரம், எம்.சுப்புலாபுரம், கோவிந்த நகரம், ஜி. உசிலம்பட்டி, வெங்கடாச்சலபுரம், ஆகிய பகுதிகளில் மின் விநியோகம் தடை செய்யப்படும் என்று மின்வாரியம் அறிவித்துள்ளது.