கோயம்புத்தூரில் நாளை (ஏப்ரல் 12) மின்தடை ஏற்பட உள்ள பகுதிகள் – மின்வாரியம் அறிவிப்பு!

0
கோயம்புத்தூரில் நாளை (ஏப்ரல் 12) மின்தடை ஏற்பட உள்ள பகுதிகள் - மின்வாரியம் அறிவிப்பு!
கோயம்புத்தூரில் நாளை (ஏப்ரல் 12) மின்தடை ஏற்பட உள்ள பகுதிகள் - மின்வாரியம் அறிவிப்பு!
கோயம்புத்தூரில் நாளை (ஏப்ரல் 12) மின்தடை ஏற்பட உள்ள பகுதிகள் – மின்வாரியம் அறிவிப்பு!

பட்டணம் மற்றும் தொண்டாமுத்தூர் பகுதிகளில் உள்ள துணை மின் நிலையத்தில் மாதாந்திர பணிகள் நடைபெற உள்ளதால் பட்டணம் மற்றும் தொண்டாமுத்தூர் பகுதியை சுற்றியுள்ள பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.

மின்தடை:

தமிழகத்தில் ஒவ்வொரு மாதமும் வெவ்வேறு பகுதிகளில் மின்தடை அறிவிக்கப்பட்டு மின்னணு சாதனங்கள் அனைத்தும் சரிபார்க்கப்படுகிறது. பெரும்பாலான இடங்களில் இந்த மின்னணு சாதனங்களில் கோளாறு, மின் துண்டிப்பு, மின் தடை, மின் கசிவு ஆகியவை ஏற்படுகின்றன மற்றும் பல இடங்களில் எதிர்பாராத விதமாக விபத்துகள் நிகழ்ந்து வருகின்றன. மின் இணைப்பு துண்டிப்பு மற்றும் மின் கசிவினை தடுக்க அரசு தகுந்த நடவடிக்கை எடுத்து வருகிறது. அனைத்து மாவட்டங்களிலும் ஒரே நாளில் மின்தடை செய்யப்படுவதில்லை.

தமிழக அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி (DA) உயர்வு – வலுக்கும் கோரிக்கை!

மின்னணு சாதனங்கள் சரிபார்க்கப்படும் பகுதிகளில் மட்டுமே மின் தடை செய்யப்படுகிறது மேலும் மின் தடை செய்யப்பட உள்ள பகுதிகள் முன்கூட்டியே மக்களுக்கு தெளிவு படுத்தப்படுகிறது. பட்டணம் மற்றும் தொண்டாமுத்தூர் பகுதிகளில் உள்ள துணை மின் நிலையங்களில் நாளை மாதாந்திர பணிகள் நடைபெற உள்ளதால் மின்சார வினியோகம் நிறுத்தப்படும் என தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது. மேலும், எந்தெந்த பகுதிகளில் மின் வினியோகம் நிறுத்தப்படும் என்பதற்கான தகவலும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

அதாவது பட்டணம் துணை மின் நிலையங்களான பட்டணம் புதூர், பீடம்பள்ளி, சத்திய நாராயணபுரம், காவிரி நகர், ஸ்டேன்ஸ் காலனி, நெசவாளர் காலனி, வெள்ளலூர் பட்டணம், நாயக்கன்பாளையம் முதலான பகுதிகளில் நாளை மின் வினியோகம் நிறுத்தப்படும். மேலும், தொண்டாமுத்தூர் துணை மின் நிலையங்கலான கெம்பனூர், முத்தி பாளையம், கலிக்க நாயக்கன்பாளையம், பூச்சியூர், புதுப்பாளையம், தீனம்பாளையம், உலியம்பாலயம், காளியூர், குளத்துப்பாளையம், மேற்கு சித்திரைச்சாவடி ஆகிய பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் வினியோகம் நிறுத்தப்படும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here