திருப்பூரில் நாளை (நவ.27) மின்தடை ஏற்பட உள்ள பகுதிகள் – மின்வாரியம் அறிவிப்பு!
திருப்பூர் சந்தைப் பேட்டை துணை மின் நிலையத்தில் நாளை (26.11. 2021) மின்தடை செய்யப்படும் என்று மின்வாரியம் அறிவித்துள்ளது. மின்தடை ஏற்படும் பகுதிகளை இப்பதிவில் காண்போம்.
மின்தடை:
தமிழகத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் அணைத்து மாவட்டங்களிலும் தவறாது நடைபெற்று வருகிறது. துணை மின் நிலையங்களில் மின் பராமரிப்பு பணிகளின் போது மின் மின் ஊழியர்கள் பாதுகாப்பிற்காக பராமரிப்பு பணிகள் முடிவுபெறும் வரி மின் தடை செய்யப்பட்டு வருகிறது. மின் தடை செய்யப்படுவது குறித்து முன்கூட்டியே அந்தந்த பகுதி செயற்பொறியாளர் மக்களுக்கு தெரிவித்து வருகின்றனர். பராமரிப்பு பணிகள் செய்யப்பட்டதன் மூலம் முன் தொடர்பான குறைகள் நிவர்த்தி செய்யப்படுகிறது.
சென்னை: அதிரடியாக உயர்ந்த ஆபரணத் தங்கத்தின் விலை – ஒரே நாளில் ரூ.368 அதிகரிப்பு!
பராமரிப்பு பணிகள் மேற்கொள்வதன் மூலம் மக்களுக்கு பாதுகாப்பான தடையில்லா மின்சாரம் கிடைக்கிறது. மின் பராமரிப்பு பணிகளின் போது மின் கம்பங்களின் அருகே மின் விநியோகத்திற்கு இடையூறாக உள்ள மரக்கிளைகள் அகற்றப்பட்டு சரி செய்யப்படுகிறது. மற்ற பகுதிகளை தொடர்ந்து நாளை (26.11.2021) திருப்பூர் மாவட்டம் சந்தைப்பேட்டை பகுதியில் துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளது.
தமிழகத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணத்தொகை – மக்கள் எதிர்பார்ப்பு!
அதனால் காங்கேயம், சிவன்மலை, ஆலம்பாடி, ராயர் வலசு, கோவில்பாளையம், காமாட்சிபுரம், பெருமாள்மலை, சாவடிபாளையம், டி.ஆர்.பாளையம், நாமக்காரன்புதூர், கோயம்பேடு, வேலாயுதம் புதூர், மறவபாளையம், சாவடி, மூர்த்தி ரெட்டிபாளையம், பல்லடம் சாலை, தென்னம்பாளையம், கல்லாங்காடு, வெள்ளியங்காடு, கே.எம். நகர், கே.எம்.ஜி. நகர் மரவபாளையம், பரஞ்சேர்வழி, ஏ.பி.டி. நகர், கே.வி.ஆர். நகர், பூச்சக்காடு, மங்கலம் ஆகிய பகுதிகளிலும் அதன் சுற்றுவட்டார பகுதிகளுக்கும் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் தடை செய்யப்படும் என்று மின்வாரியம் தெரிவித்துள்ளது.