தென்காசியில் 21ம் தேதி (நாளை) மின்தடை ஏற்படவுள்ள பகுதிகள் – மின்வாரியம் அறிவிப்பு!

0
தென்காசியில் 21ம் தேதி (நாளை) மின்தடை ஏற்படவுள்ள பகுதிகள் - மின்வாரியம் அறிவிப்பு!
தென்காசியில் 21ம் தேதி (நாளை) மின்தடை ஏற்படவுள்ள பகுதிகள் - மின்வாரியம் அறிவிப்பு!
தென்காசியில் 21ம் தேதி (நாளை) மின்தடை ஏற்படவுள்ள பகுதிகள் – மின்வாரியம் அறிவிப்பு!

தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூர் பகுதியில் நாளை மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் எந்தெந்த பகுதிகளில் மின்தடை ஏற்படும் என மின்வாரிய செயற் பொறியாளர்கள் மாரியப்பன் (கடையநல்லூர்), தங்கராஜ் (சங்கரன்கோவில்) ஆகியோர் அதிகாரப்பூர்வமாக தெரிவித்து உள்ளனர்.

மின்தடை:

தமிழகத்தில் உள்ள பொதுத்துறை நிறுவனங்களில் மிக அதிக லாபம் ஈட்டி தருவது மின்சாரத்துறை ஆகும். இந்த துறையில் தமிழ்நாடு முழுவதும் லட்சக்கணக்கான ஊழியர்கள் பணி புரிகின்றனர். மேலும் வளர்ந்து வரும் பொருளாதார வளர்ச்சியில் மின்சாரத்தின் பங்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. தமிழ்நாடு அரசு மின்வாரிய துறையில் பல சீர்திருத்தங்களை மேற்கொண்டு வருகிறது. புதிய மின் இணைப்பு பெறுவதிலும், மாதாந்திர மின் கணக்கீடு செய்வதிலும் சில திருத்தங்களை கொண்டு வந்துள்ளது. தற்போது அவை நடைமுறையிலும் உள்ளன.

Exams Daily Mobile App Download

தமிழ்நாடு மின்பகிர்மான கழகம் பல வழிகளில் மின்சாரத்தை உற்பத்தி செய்கிறது. நீர்,காற்று,காற்றாலை ஆகியவற்றின் மூலமும் சூரிய ஒளி மற்றும் சோலார் சிஸ்டம் மூலமும் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. இதன் மூலம் உற்பத்தியாகும் மின்சாரம் அந்தந்த மாவட்டங்களில் உள்ள துணை மின் நிலையங்களுக்கு அனுப்பப்படுகிறது. அத்தகைய துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிக்காக மாதம் ஒரு முறை மின்தடை செய்யப்படுகிறது. இவ்வாறு மின்தடை செய்யும் போது மின்தடை ஏற்படும் பகுதிகளில் உள்ள மின் கம்பிகளை சரி செய்வது, மின் இணைப்புகளுக்கு இடையூறாக இருக்கும் மரங்கள் அகற்றும் பணிகள் போன்றவற்றை மின் ஊழியர்கள் மேற்கொள்வார்கள். அந்த சமயம் மின் ஊழியர்களுக்கு எந்தவித இடையூறும், உயிர் சேதமும் ஏற்படாத வகையில் மின்தடை செய்யப்படுகிறது.

கள்ளக்குறிச்சி தனியார் பள்ளி கலவர விவகாரம் – எஸ்பி நேரில் ஆய்வு!

அந்த வகையில் தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூர் கடையநல்லூர் மின் கோட்டத்துக்கு உட்பட்ட நாராயணபுரம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் 21ம் தேதி (வியாழக்கிழமை) மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அங்கிருந்து மின் விநியோகம் பெறும் தரணி நகர், வாசுதேவநல்லூர், சங்கனாபேரி, திருமலா புரம், ராமநாதபுரம், கூடலூர், சங்குபுரம், கீழப்புதூர், நெல்கட்டும் செவ்வல், சுப்ரமணியபுரம், உள்ளார், வெள்ளாளங்கோட்டை, தாருகாபுரம் உள்ளிட்ட பகுதிகளில் நாளை மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது. அதே போல் மலையாளங்குளம், கலிங்கப்பட்டி, ஆகிய துணை மின் நிலையங்களில் இருந்து மின் விநியோகம் பெறும் மலையாளங்குளம், சிதம்பரபுரம், செவல்குளம், மேலநீலிதநல்லூர், குருக்கள்பட்டி, கலிங்கப்பட்டி, திருவேங்கடம்,சத்திரப்பட்டி, உமையத்தலைவன்பட்டி, ஆலடிப்பட்டி, மலையடிப்பட்டி, சுப்புலாபுரம், சென்னிகுளம், பாறைப்பட்டி, பருவக்குடி, கரிசல்குளம், ரெங்கசமுத்திரம், ஆலமநாயகம்பட்டி, மகாதேவர்பட்டி, குறிஞ்சாகுளம், புதுப்பட்டி, ஆவுடையார்புரம், குண்டப்பட்டி ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்தடை செய்யப்படுவதாக மின் செயற்பொறியாளர்கள் மாரியப்பன் (கடையநல்லூர்), தங்கராஜ் (சங்கரன்கோவில்) ஆகியோர் தெரிவித்து உள்ளனர்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!