தமிழகத்தில் நாளை (அக்.12) மின்தடை ஏற்பட உள்ள பகுதிகள் – மின்வாரியம் அறிவிப்பு!

0
தமிழகத்தில் நாளை (அக்.12) மின்தடை ஏற்பட உள்ள பகுதிகள் - மின்வாரியம் அறிவிப்பு!
தமிழகத்தில் நாளை (அக்.12) மின்தடை ஏற்பட உள்ள பகுதிகள் - மின்வாரியம் அறிவிப்பு!
தமிழகத்தில் நாளை (அக்.12) மின்தடை ஏற்பட உள்ள பகுதிகள் – மின்வாரியம் அறிவிப்பு!

தஞ்சாவூரில் நாளை அக்-12 செவ்வாய் கிழமை மின் பராமரிப்பு பணிகளின் காரணமாக தஞ்சாவூரை சுற்றியுள்ள பல பகுதிகளில் மின்தடை ஏற்படும் என்று மின்சார வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அது குறித்த தகவல்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

தஞ்சாவூரில் மின்தடை:

தமிழகத்தில் தற்போது முதலமைச்சர் முக.ஸ்டாலின் தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது. அதனை தொடர்ந்து மின்சாரத் துறை அமைச்சராக வி.செந்தில் பாலாஜி பதவி ஏற்றுள்ளார். தமிழகத்தில் பல பகுதிகளில் மின்கம்பங்கள் சரியான முறையில் பராமரிக்கப்படாத காரணத்தால் பழுதாகி வருகின்றது. இதனால் மின்கம்பங்கள் விழும் அபாயம் ஏற்படுகிறது. இதனை தடுக்கும் விதமாக மாதம் ஒரு முறை மின் பரம்பரிப்பு பணிகள் மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டது. அதனை தொடர்ந்து முதலமைச்சரின் வழிகாட்டுதலின்படி தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் மாதம் ஒரு முறை மின் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

அக்டோபர் மாதத்தில் இன்னும் 9 நாட்களுக்கு வங்கிகள் விடுமுறை – வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு!

அவ்வாறு மின்பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளும் மாவட்டங்களில் உள்ள பல்வேறு பகுதிகளுக்கு மின்தடை அறிவித்து மின்சார வாரியம் அறிவிப்பு வெளியிடும் . இது குறித்து முன்தினம் மின்சார வாரியத்தால் அறிவிப்பும் வெளியிடப்படும். அதனடிப்படையில் தஞ்சாவூர் மணிமண்டபம் துணை மின் நிலையத்தில் நாளை மின்பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளுவதாக தமிழ்நாடு மின் உற்பத்தி, பகிர்மான கழகத்தின் தஞ்சாவூர் நகரிய உதவி செயற்பொறியாளர் ஜோ.சுகுமார் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

TCS நிறுவனத்தில் சூப்பர் வேலைவாய்ப்பு – விண்ணப்பங்கள் வரவேற்பு! பட்டதாரிகள் கவனத்திற்கு!

அதனால் தஞ்சாவூரை சுற்றியுள்ள யாகப்பா நகர், அருளானந்த நகர், அருளானந்தம்மாள் நகர், பிலோமினா நகர், காத்தூண் நகர், சிட்கோ, அண்ணா நகர், காமராஜர் நகர், அண்ணாமலை நகர், பாத்திமா நகர், கண்ணன் நகர், ராஜப்பா நகர், கணபதி நகர், டி.பி.எஸ் நகர், ஜேஜே. நகர், பாலாஜி நகர் ஆகிய பகுதிகளில் நாளை அக்-12 செவ்வாய் கிழமை காலை 10 மணி முதல் மாலை 1 மணிவரை மின்தடை ஏற்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். இவ்வாறாக முதலமைச்சர் வழங்கும் ஆலோசனையின் அடிப்படையில் மின்சாரத்துறை அமைச்சர் வி.செந்தில் பாலாஜி சிறப்பான முறையில் செயல்படுகிறார்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here