தமிழகத்தில் சனிக்கிழமை (ஜூன் 4) மின்தடை ஏற்பட உள்ள பகுதிகள் – மின்வாரியம் அறிவிப்பு!

0
தமிழகத்தில் சனிக்கிழமை (ஜூன் 4) மின்தடை ஏற்பட உள்ள பகுதிகள் - மின்வாரியம் அறிவிப்பு!
தமிழகத்தில் சனிக்கிழமை (ஜூன் 4) மின்தடை ஏற்பட உள்ள பகுதிகள் - மின்வாரியம் அறிவிப்பு!
தமிழகத்தில் சனிக்கிழமை (ஜூன் 4) மின்தடை ஏற்பட உள்ள பகுதிகள் – மின்வாரியம் அறிவிப்பு!

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள காரைக்குடி துணை மின் நிலையத்தில் வருகிற ஜூன் 4ல் மின் பராமரிப்பு பணி மேற்கொள்ள இருப்பதால் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது எனவும், எந்தெந்த பகுதிகளில் மின்தடை ஏற்படும் என்கிற தகவல்களையும் அம்மாவட்ட மின்வாரிய செயற்பொறியாளர் ஜான்சன் தெரிவித்துள்ளார்.

மின்தடை:

தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் ஒவ்வொரு மாதமும் மின்னணு சாதனங்கள் அனைத்தும் சரியாக செயல்படுகிறதா என்று பழுது பார்க்கப்படுகிறது. ஏனெனில் பெரும்பாலான இடங்களில் மின் கம்பங்களில் மின் கசிவு மற்றும் மின் இணைப்பு துண்டிப்பு ஏற்பட்டு மின்னணு சாதனங்கள் பழுதாவதன் மூலம்
பல விபத்துகளும் நடந்து விடுகின்றன. இத்தகைய விபத்தை தடுப்பதற்காகவே தமிழக அரசு தகுந்த நடவடிக்கையாக மாதாந்திர பராமரிப்பு பணியை மேற்கொண்டு வருகிறது.

1 முதல் 12ம் வகுப்புகளுக்கு பள்ளிகள் மீண்டும் திறப்பு – மாணவர்கள் உற்சாக வருகை!

இவ்வாறு ஒவ்வொரு மாதமும் மேற்கொள்ளக்கூடிய இந்த பணியின் நிமித்தம் அம்மாவட்ட வட்டாரங்களுக்கு மின் தடை ஏற்படும். அதன்படி எந்தெந்த பகுதிகளில் மின் விநியோகம் தடையாகும் என்ற தகவல்களை அந்தந்த மாவட்ட செயற்பொறியாளர்கள் முன்கூட்டியே வெளியிட்டு விடுவார்கள். அவ்விதமாக சிவகங்கை மாவட்டத்திலுள்ள காரைக்குடி வட்டார துணை மின் நிலையத்தில் வருகிற ஜூன் 4 ந் தேதி சனிக்கிழமை அன்று மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற இருக்கிறது.

Exams Daily Mobile App Download

அதனால் மின் நிலையத்தை சுற்றியுள்ள பகுதிகளான காரைக்குடி நகர் பகுதிகள், பேயம்பட்டி ஹவுசிங் போர்டு, செக்காலை கோட்டை, பாரி நகர், ஆறுமுக நகர், மன்னர் நகர், கல்லூரி சாலை, செக்காலை சாலை, புதிய பஸ் நிலையம், கல்லுக்கட்டி, பழைய பஸ் நிலையம், கோவிலூர் ரோடு, செஞ்சை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் விநியோகம் தடை செய்யப்படும் என்று மின்வாரிய செயற்பொறியாளர் ஜான்சன் தெரிவித்துள்ளார்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here