தமிழகத்தில் நாளை (ஜூன் 8) மின்தடை ஏற்பட உள்ள பகுதிகள் – மின்வாரியம் அறிவிப்பு!

0
தமிழகத்தில் நாளை (ஜூன் 8) மின்தடை ஏற்பட உள்ள பகுதிகள் - மின்வாரியம் அறிவிப்பு!
தமிழகத்தில் நாளை (ஜூன் 8) மின்தடை ஏற்பட உள்ள பகுதிகள் - மின்வாரியம் அறிவிப்பு!
தமிழகத்தில் நாளை (ஜூன் 8) மின்தடை ஏற்பட உள்ள பகுதிகள் – மின்வாரியம் அறிவிப்பு!

சிவகாசி மின் கோட்டத்திற்கு உட்பட்ட திருத்தங்கல், சுக்கிரவார்பட்டி ஆகிய துணை மின் நிலையங்களில் நாளை ஜூலை 8ம் தேதி மாதாந்திர பணிகள் நடைபெறுவதால் நாளை மின்தடை செய்யப்படும் என மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மின்தடை

தமிழகத்தில் இருக்கும் அனைத்து மாவட்டங்களுக்கும் தடையில்லா மின்சாரத்தை வழங்குவதற்காக தமிழக அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. அதன்படி, மின்சாரத்தின் தேவை சிறு தொழில்கள் முதல் பெரிய தொழில்கள் வரை அதிகம் பயன்படுகிறது. ஏனென்றால், முந்தைய காலத்தில் அனைத்து விதமான பணிகளுக்கும் மனிதர்கள் மட்டுமே வேலை செய்வார்கள். ஆனால், இன்றைய கால கட்டத்தில் எல்லா பணிகளையும் இயந்திரங்களை வைத்து செய்து வருகின்றனர்.

Exams Daily Mobile App Download

மக்கள் அனைவரும் மின்சாரத்தின் நுணுக்கம் தெரிந்து கவனமாக பயன்படுத்தினால் அது அதிகமான பயன்களை அளிக்கும். அப்படிஇல்லாமல் அஜாக்கிரதையாக பயன்படுத்தினால் மோசமான விளைவை அளிக்கும். இப்படி எல்லாம் இருப்பதால் தமிழ்நாடு மின் வாரியம் எந்த வித விபத்துகளும் நடக்காமல் இருக்க மாதம் ஒரு முறை மின்தடை செய்யப்பட்டு மின் நிலையங்களில் இருக்கும் பழுதடைந்த மின் கம்பிகளை மாற்றுதல், மின் ஊழியர்கள் மின் கம்பங்களில் ஏறி அனைத்து பகுதிகளுக்கும் சப்ளை ஆகும் வயர்கள் அறுந்து இருக்கிறதா என்று சரி செய்வார்கள்.

மத்திய அரசு ஊழியர்களுக்கு விரைவில் 6% அகவிலைப்படி (DA) உயர்வு – சம்பளம் எவ்வளவு அதிகரிக்கும்?

மேலும், மின் வயர்களில் உராய்வு பெறும் மரக் கிளைகளை அகற்றுதல், ஏதேனும் மின் துண்டிப்பு ஏற்பட்டிருக்கிறதா என்பதை மின்தடையின் போது சரி செய்யும் பணிகளை செய்து வருகின்றனர். அதனை தொடர்ந்து சிவகாசி கோட்டத்திற்கு உட்பட்ட திருத்தங்கல், சுக்கிரவார்பட்டி ஆகிய துணை மின்நிலையங்களில் இருந்து மின்சாரம் பெறும் பகுதிகளான திருத்தங்கல் டவுன், செங்கமலநாச்சியார்புரம், கீழ திருத்தங்கல், அதிவீரன்பட்டி, நமஸ்கரித்தான் பட்டி, சாணார்பட்டி, ஸ்டேட் பாங்க் காலனி, சாரதாநகர், பூவநாதபுரம், வடபட்டி, நடுப்பட்டி, ஈஞ்சார், தேவர்குளம், சுக்கிரவார்பட்டி ஆகிய பகுதிகளில் நாளை 8ம் தேதி காலை 9 மணி மாலை 5 மணி வரை மின்தடை செய்யப்பட்டு மின் நிறுத்தம் செய்யப்படும் என மின்வாரிய அதிகாரி பாவநாசம் தெரிவித்திருக்கிறார்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here