தமிழகத்தில் நாளை (நவ.6) மின்தடை ஏற்பட உள்ள பகுதிகள் – மின்வாரியம் அறிவிப்பு!

0
தமிழகத்தில் நாளை (நவ.6) மின்தடை ஏற்பட உள்ள பகுதிகள் - மின்வாரியம் அறிவிப்பு!
தமிழகத்தில் நாளை (நவ.6) மின்தடை ஏற்பட உள்ள பகுதிகள் - மின்வாரியம் அறிவிப்பு!
தமிழகத்தில் நாளை (நவ.6) மின்தடை ஏற்பட உள்ள பகுதிகள் – மின்வாரியம் அறிவிப்பு!

தமிழகத்தில் நாளை சனிக்கிழமை தஞ்சாவூா் மருத்துவக் கல்லூரிச் சாலை, செங்கிப்பட்டி துணை மின் நிலையங்களில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. எனவே மின்தடை ஏற்படும் பகுதிகள் பற்றிய விவரம் வெளியிடப்பட்டுள்ளது.

மின்தடை:

ஊரடங்கு காலத்தில் முன்னறிவிப்புகள் ஏதும் வழங்கப்படாமல் மின்தடை செய்யப்பட்டு வந்தது. இதனால் பாதிக்கப்பட்ட மக்கள் புகார் அளித்து வந்தனர். எனவே தற்போது தமிழகத்தில் திமுக தலைமையிலான அரசு மின்சார துறையில் முழு கவனம் செலுத்தி வருகிறது. தமிழகம் முழுவதும் மின்சாரத்துறைக்கு வரும் புகார்களை உடனடியாக தீர்த்து வைக்க அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. எதிர்காலத்தில் மின் கம்பிகள் அறுந்து விழுந்து விபத்துகள் ஏற்படாமல் இருப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

தமிழகத்தில் 1 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறப்பு – முக்கிய கோரிக்கை முன்வைப்பு!

மேலும் அனைத்து மாவட்டங்களிலும் மாதம் ஒரு முறை மின் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளுமாறு மின்துறை அமைச்சர் உத்தரவிட்டுள்ளார். அதனால் பல மாவட்டங்களில் மாதந்தோறும் பராமரிப்பு பணிகள் பகுதி வாரியாக நடைபெற்று வருகிறது. மேலும் தற்போது மழைக்காலம் என்பதால் மின்சார விபத்துகள் அதிகம் ஏற்படாத வண்ணம் மின்சார பணிகள் நடைபெற்று வருகிறது. மற்ற பகுதிகளை தொடர்ந்து தஞ்சாவூா் மருத்துவக்கல்லூரிச் சாலை, செங்கிப்பட்டி துணை மின் நிலையங்களில் மாதாந்திர மின் பராமரிப்பு நடைபெறவுள்ளது. மின்தடை ஏற்படும் பகுதிகள் குறித்து கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

தஞ்சாவூா் மருத்துவக் கல்லூரிச் சாலை துணை மின் நிலையம்:

வரும் சனிக்கிழமை கரந்தை, பள்ளியக்ரஹாரம், பள்ளியேரி, திட்டை, பாலோபநந்தவனம், சுங்கான்திடல், நாலுகால் மண்டபம், அரண்மனைப் பகுதிகள், திருவையாறு, கண்டியூா், நடுக்கடை, மேலத்திருப்பூந்துருத்தி, நடுக்காவேரி, திருவாலம்பொழில், கள்ளப்பெரம்பூா், தென்பெரம்பூா், பணவெளி, அள்ளூா், நாகத்தி, சக்கரசாமந்தம், களிமேடு, விளாா், நாஞ்சிக்கோட்டை, காவேரி நகா், வங்கி ஊழியா் காலனி, இ.பி. காலனி மற்றும் சுற்றுப்பகுதிகளில் மின்பராமரிப்பு ஊழியர்களின் நலன் கருதி காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்விநியோகம் தடை செய்யப்படும் என கூறப்பட்டுள்ளது.

செங்கிப்பட்டி துணை மின் நிலையம்:

செங்கிப்பட்டி, ஆச்சாம்பட்டி, முத்தாண்டிப்பட்டி, பாளையப்பட்டி, காதாடிப்பட்டி, சிதம்பரப்பட்டி, துருசுப்பட்டி, வளம்பக்குடி, மனையேறிப்பட்டி, புதுக்குடி, சமத்துவபுரம், நவலூா், ராயமுண்டான்பட்டி, ராயாம்பட்டி, வெண்டையம்பட்டி உள்ளிட்ட கிராமங்களில் மின் பராமரிப்பு ஊழியர்களின் நலன் கருதி காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்விநியோகம் தடை செய்யப்படும் என கூறப்பட்டுள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here