சென்னை வாசிகள் கவனத்திற்கு – ஜூலை 27 மின்தடை ஏற்படும் பகுதிகள்!

0
சென்னை வாசிகள் கவனத்திற்கு - ஜூலை 27 மின்தடை ஏற்படும் பகுதிகள்!
சென்னை வாசிகள் கவனத்திற்கு - ஜூலை 27 மின்தடை ஏற்படும் பகுதிகள்!
சென்னை வாசிகள் கவனத்திற்கு – ஜூலை 27 மின்தடை ஏற்படும் பகுதிகள்!

தமிழகத்தின் தலைநகர் சென்னையில் நாளை (27.07.2021) மின் பராமரிப்பு பணிகள் காரணமாக தாம்பரம், கே.கே.நகர், சிட்லப்பாக்கம், ஐ.டி. கோரிடர், கிண்டி ஆகிய பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் விநியோகம் தடை செய்யப்படும் என மின்வாரியம் தெரிவித்துள்ளது.

மின் தடை :

தமிழகத்தில் கடந்த மாதம் ஊரடங்கின் போது மாவட்டம் தோறும் உள்ள மின் நிலையங்களில் மின் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டது. அதே போல் மாதம்தோறும் மின் ஊழியர்கள் மின் பராமரிப்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். இதன் காரணமாக அனைத்து பகுதிகளிலும் குறிப்பிட்ட நேரம் மின் தடை செய்யப்படும். இதனால் வீடுகளில் இருந்து பணி புரிபவர்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகினர்.மேலும் புதிதாக தலைமையேற்றுள்ள அரசு மின் கட்டணம் செலுத்தும் முறைகளில் பல்வேறு சலுகைகளை அளித்தது.

குழந்தைகளுக்கான பால் (Baal) ஆதார் அட்டை முன்பதிவு – எளிய வழிமுறைகள் இதோ!

இதனால் மின் நுகர்வோர்கள் குழப்பத்தில் ஆழ்ந்தனர். மேலும் தமிழகத்தில் மாதந்தோறும் மின் கட்டணம் செலுத்தும் முறை கொண்டு வரப்படும் என முக ஸ்டாலின் தேர்தலின் போது வாக்குறுதி அளித்தார். அதன்படி மாதந்தோறும் மின் கட்டணம் வசூலிக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் தெரிவித்துள்ளார். அதனை தொடர்ந்து சென்னையில் மின் தொடர்பாக புகார் அளிக்க மின்சார உதவி மையம் அமைக்கப்பட்டுள்ளது. இனி தமிழகத்தில் மாதந்தோறும் மின் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு தடையில்லா மின்சாரம் வழங்கப்படும் என அமைச்சர் செந்தில் பாலாஜி உறுதி அளித்துள்ளார்.

TN Job “FB  Group” Join Now

அதன்படி, இந்த மாதம் முதல் மாவட்டம் வாரியாக மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மற்ற பகுதிகளை தொடர்ந்து நாளை (27.07.2021) சென்னையில், தாம்பரம், கே.கே.நகர், சிட்லப்பாக்கம், ஐ.டி. கோரிடர், கிண்டி ஆகிய பகுதிகளிலும் அதனை சுற்றியுள்ள பகுதிகளிலும் மின் பராமரிப்பு பணிகள் காரணமாக காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் விநியோகம் தடை செய்யப்படும் என மின்வாரியம் தெரிவித்துள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here