நாமக்கல்லில் நாளை (ஏப்ரல் 1) மின்தடை ஏற்பட உள்ள பகுதிகள் – மின்வாரியம் அறிவிப்பு!

0
நாமக்கல்லில் நாளை (ஏப்ரல் 1) மின்தடை ஏற்பட உள்ள பகுதிகள் - மின்வாரியம் அறிவிப்பு!
நாமக்கல்லில் நாளை (ஏப்ரல் 1) மின்தடை ஏற்பட உள்ள பகுதிகள் - மின்வாரியம் அறிவிப்பு!
நாமக்கல்லில் நாளை (ஏப்ரல் 1) மின்தடை ஏற்பட உள்ள பகுதிகள் – மின்வாரியம் அறிவிப்பு!

தமிழகத்தில் உள்ள நாமக்கல் மாவட்டத்தில் புதன்சந்தை துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் நாளை (ஏப்ரல் 1) காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மின் விநியோகம் தடை செய்யப்படும் என்று மின் வாரியம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

மின்தடை அறிவிப்பு:

தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் மாதந்தோறும் மின்தடை அறிவிக்கப்பட்டு மின் சாதனங்கள் சரிபார்ப்பு மற்றும் மின் கம்பங்களில் மின்கசிவு, மின் இணைப்பு துண்டிப்பு என்று ஏதாவது பிரச்சனைகள் இருக்கிறதா என்பதை அந்தந்த மாவட்டங்களில் இருக்கும் துணை மின் நிலையத்தின் சார்பில் மின் ஊழியர்கள் சரி பார்பர். மேலும் அந்தந்த ஊர் மக்களுக்கு மின்தடைக்கான அறிவிப்புகள் முன்னரே தெரிவிக்கப்பட்டு விடும். இந்த நிலையில் தற்போது நாமக்கல் மாவட்டத்தில் நாளை மின்தடை ஏற்பட இருப்பதாக மின் வாரியம் சார்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டம் அமல் – பணியாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்!

இந்நிலையில், நாமக்கல் மாவட்டத்தில் உள்ள பல்வேறு பகுதிகளில் நாளை (ஏப்ரல் 1) காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, புதன்சந்தை துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மின்சார விநியோகம் தடை செய்யப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

மின்தடை ஏற்படும் பகுதிகள், செல்லப்பம்பட்டி, மின்னாம்பள்ளி, புதன்சந்தை, கொளத்துபாளையம், ஏளூர், தத்தாத்திரிபுரம், கல்யாணி, நாட்டாமங்கலம், அம்மாபாளையம், கொழிஞ்சிப்பட்டி, புதுச்சத்திரம், பாச்சல், பிடாரிப்பட்டி, மூணுசாவடி, ஏ.பு.பாளையம், களங்காணி, காரைக்குறிச்சி உள்ளிட்ட பகுதிகளில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்சாரம் விநியோகம் தடை செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here