தமிழகத்தில் அக்.20ம் தேதி மின்தடை ஏற்பட உள்ள பகுதிகள் – மின்வாரியம் அறிவிப்பு!

0
தமிழகத்தில் அக்.20ம் தேதி மின்தடை ஏற்பட உள்ள பகுதிகள் - மின்வாரியம் அறிவிப்பு!
தமிழகத்தில் அக்.20ம் தேதி மின்தடை ஏற்பட உள்ள பகுதிகள் - மின்வாரியம் அறிவிப்பு!
தமிழகத்தில் அக்.20ம் தேதி மின்தடை ஏற்பட உள்ள பகுதிகள் – மின்வாரியம் அறிவிப்பு!

திண்டுக்கல் மாவட்டம் எரியோடு பகுதிகளில் நாளை நெடுஞ்சாலை விரிவாக்கத்துக்காக மின்கம்பங்களை இடமாற்றம் செய்யும் பணிகள் நடைபெற உள்ளது. எனவே மின்தடை ஏற்படும் பகுதிகள் குறித்த விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.

மின்தடை:

தமிழகத்தில் கடந்த 10 ஆண்டுகளுக்கு பிறகு ஆட்சி அமைத்திருக்கும் தி.மு.க மீது மின்தடை குறித்த புகார்களும், விமர்சனங்களும் எழுந்த வண்ணம் இருந்தது. இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக தமிழக மின்துறை அமைச்சர் செய்தியாளர்களிடையே விளக்கம் அளித்தார். அதில், கடந்த பல மாதங்களாக பராமரிப்பு பணிகள் எதுவும் நடைபெறாததால் தற்போது அவை படிப்படியாக நடைபெற்று வருகிறது. இதன் காரணமாக ஆங்காங்கே மின்தடை ஏற்படும் எனவும் கூறினார்.

CBSE 10, 12ம் வகுப்புகளுக்கான பருவத்தேர்வு 2021 – கால அட்டவணை வெளியீடு!

கடந்த மாதங்களில் நடைபெற்ற மின் பராமரிப்பு பணிகளுக்கு பிறகு மாதந்தோறும் தவறாது அனைத்து மாவட்டங்களிலும் உள்ள துணை மின் நிலையங்களிலும் மின் பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. மற்ற பகுதிகளை தொடர்ந்து நாளை எரியோடு பகுதியில் நெடுஞ்சாலை விரிவாக்கத்துக்காக மின்கம்பங்களை இடமாற்றம் செய்யும் பணிகள் நடைபெற உள்ளது. எனவே அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நாளை மின்தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

தமிழகத்தில் வியாழக்கிழமை (அக்.21) மின்தடை ஏற்பட உள்ள பகுதிகள் – மின்வாரியம் அறிவிப்பு!

எனவே எரியோடு, நாகையகோட்டை, புதுரோடு, வெல்லம்பட்டி, குண்டாம்பட்டி, பாகாநத்தம், கோட்டைக்கட்டியூா், சவடகவுண்டன்பட்டி, மல்வாா்பட்டி, நல்லமநாயக்கன்பட்டி, அச்சணம்பட்டி, தண்ணீா்பந்தம்பட்டி, தொட்டணம்பட்டி, நல்லமனாா்கோட்டை, குளத்தூா், கொசவப்பட்டி, சூடாமணிப்பட்டி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் காலை 9 முதல் மாலை 5 மணி வரை மின்விநியோகம் தடை செய்யப்படும் என உதவி செயற்பொறியாளர் அவர்கள் கூறியுள்ளார்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here