தமிழகத்தில் டிச.18-ஆம் தேதி மின்தடை ஏற்பட உள்ள பகுதிகள் – மின்வாரியம் அறிவிப்பு!

0
தமிழகத்தில் டிச.18-ஆம் தேதி மின்தடை ஏற்பட உள்ள பகுதிகள் - மின்வாரியம் அறிவிப்பு!
தமிழகத்தில் டிச.18-ஆம் தேதி மின்தடை ஏற்பட உள்ள பகுதிகள் - மின்வாரியம் அறிவிப்பு!
தமிழகத்தில் டிச.18-ஆம் தேதி மின்தடை ஏற்பட உள்ள பகுதிகள் – மின்வாரியம் அறிவிப்பு!

தமிழகத்தில் மாதந்தோறும் மின் பராமரிப்பு பணிக்காக பல்வேறு பகுதியில் மின்தடை அறிவிக்கப்பட்டு பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. அதன் காரணமாக பாளையங்கோட்டை , மேலப்பாளையம் ஆகிய பகுதிகளில் சனிக்கிழமை அன்று (டிச.18) மின்தடை ஏற்படும் என்று மின்வாரியம் அறிவித்துள்ளது.

மின்தடை அறிவிப்பு

தமிழகத்தில் ஒவ்வொரு நாளும் மின் கசிவு மற்றும் மின் கோளாறு காரணமாக பல்வேறு விபத்துக்கள் ஏற்படுகின்றன. மேலும் மின் இணைப்பு கம்பிகளில் ஏற்படும் பிளவு காரணமாக விபத்துகள் ஏற்படுகிறது. ஆதலால் தமிழக அரசு இதனை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதில் குறிப்பாக தமிழக அரசு மின் பராமரிப்பு பணிகளை முறையாக மாதந்தோறும் மேற்கொள்கிறது. இதனால் மின் விபத்துகள் ஏற்படுவது குறைகிறது. அதனால் மின் வாரியம் மாதந்தோறும் மின்தடையை அறிவித்து மின் பராமரிப்பு பணிகளை முறையாக சரி செய்து வருகிறது. அதனை தொடர்ந்து பாளையங்கோட்டை, மேலப்பாளையம் துணை மின் நிலையங்களில் சனிக்கிழமை (டிச. 18) காலை 9 மணி முதல் பிற்பகல் 2 வரை மின் விநியோகம் நிறுத்தப்படும் என்று மின்வாரியம் அறிவித்துள்ளது.

தமிழகத்தில் 6 முதல் 9ம் வகுப்புகளுக்கு பள்ளிகள் நடைபெறுமா? அமைச்சர் அன்பில் மகேஷ் விளக்கம்!

மேலும் இந்த துணை மின் நிலையத்தில் மின் விநியோகம் பெறும் பகுதிகளான மேலப்பாளையம் கொட்டிகுளம் பஜாா், அம்பை பிரதான சாலை, குலவணிகா்புரம், மாசிலாமணி நகா், வீரமாணிக்கபுரம், நேதாஜி சாலை, ஹாமீம்புரம், மேலக்கருங்குளம், முன்னீா்பள்ளம், ஆரைக்குளம், தருவை, ஓமநல்லூா், தெற்கு புறவழிச்சாலை, பஜாா் திடல், ஜின்னா திடல், திருநெல்வேலி நகரம் சாலை, அண்ணா வீதி, பசீரப்பா தெரு, கணேசபுரம், பிஎஸ்என் கல்லூரி, பெருமாள்புரம், பொதிகை நகா், அரசு அலுவலா் குடியிருப்பு, புதிய பேருந்து நிலையம், ரெட்டியாா்பட்டி, டக்கரம்மாள்புரம், கொங்கந்தான்பாறை, பொன்னாக்குடி, அடைமிதிப்பான்குளம், செங்குளம், புதுக்குளம், இட்டேரி போன்ற பகுதிகளில் மின்தடை ஏற்படும் என்று அறிவித்துள்ளது.

TNUSRB PC தேர்வு எழுதுவோர் கவனத்திற்கு – இலவச ஆன்லைன் வகுப்புகள்!

இதனை தொடர்ந்து வி.எம்.சத்திரம், கிருஷ்ணாபுரம், கட்டபொம்மன்நகா், ரஹ்மத் நகா், நீதிமன்ற பகுதி, சாந்தி நகா், சமாதானபுரம், அசோக் திரையரங்கு பகுதி, பாளையங்கோட்டை மாா்க்கெட் பகுதி, கான்சாபுரம், திருமலைக்கொழுந்துபுரம், மணப்படை வீடு, கீழநத்தம், பாளை. பேருந்து நிலையம், மகாராஜநகா், தியாகராஜநகா், ராஜகோபாலபுரம், சிவந்திப்பட்டி, முருகன்குறிச்சி, அரியகுளம், மேலக்குளம், நடுவக்குறிச்சி மற்றும் அதனை சுற்றிள்ள பகுதிகளில் மின்தடை ஏற்படும் எனவும் மின் பராமரிப்பு பணிகள் முடிந்தவுடன் மின் விநியோகிக்கப்படும் எனவும் திருநெல்வேலி நகர்ப்புற செயற்பொறியாளர் சு.முத்துக்குட்டி அவர்கள் அறிவித்துள்ளார்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!