தமிழகத்தில் நாளை (ஆக.26) ‘இந்த’ ஏரியாக்களில் Power Cut – முழு தகவல் இதோ!

0
தமிழகத்தில் நாளை (ஆக.26) 'இந்த' ஏரியாக்களில் Power Cut - முழு தகவல் இதோ!
தமிழகத்தில் நாளை (ஆக.26) ‘இந்த’ ஏரியாக்களில் Power Cut – முழு தகவல் இதோ!

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் உடன்குடி பகுதியில் நாளை பராமரிப்பு பணிகள் காரணமாக மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மின்தடை அறிவிக்கப்பட்ட பகுதிகள் குறித்து திருச்செந்தூர் கோட்ட மின் விநியோக செயற்பொறியாளர்‌ விஜயசங்கரபாண்டியன் தெரிவித்துள்ளார்.

மின்தடை:

தமிழகத்தில் கடந்த சில மாதங்களாக மின்தடை ஏற்பட்டு வருகிறது. இதனால் கிராமங்களில் இருக்கும் மக்கள் மிகவும் சிரமப்படுவதாக தெரிவித்துள்ளனர். இந்தியாவில் கடந்த சில மாதங்களாக மின் உற்பத்தி குறைந்துள்ளதால் மின்தடை ஏற்படுவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. மேலும் மக்களுக்கு தடையில்லா மின்சாரம் வழங்கும் விதமாக மத்திய, மாநில அரசுகள் ஆலோசித்து வருகின்றனர். இதை தவிர சோலார், சூரிய ஒளி மூலம் எவ்வாறு மின் உற்பத்தியை அதிகரிப்பது குறித்து முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

தமிழகத்தில் மின்வாரிய துறை மக்களுக்கு தேவையான பயனுள்ள திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. தற்போது வீடுகள்தோறும் ஸ்மார்ட் மீட்டர் பொருத்தும் திட்டம் செயல்படுத்துவது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது. இதை தவிர மாதாந்திர மின் கட்டண முறைகளும் கொண்டுவரப்பட உள்ளன. மேலும் தமிழகத்தில் விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்கி உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்தியாவில் மக்களுக்கு சீரான மின்சாரம் கிடைக்க மாவட்டம் தோறும் உள்ள துணை மின் நிலையங்களை சரிவர பராமரிப்பது அவசியம்.

சென்னை: தொடர்ந்து அதிகரித்து வரும் ஆபரணத் தங்க விலை – கவலையில் நகைப்பிரியர்கள்!

Exams Daily Mobile App Download

இதனை கருத்தில் கொண்டு மாதந்தோறும் துணை மின் நிலையங்களில் பராமரிப்பு பணிகள் மின்வாரிய ஊழியர்கள் மூலம் மேற்கொள்ளப்படுகிறது. இத்தகைய பணிகள் மேற்கொள்ளப்படும் போது எந்தவித அசம்பாவிதங்களும் நடைபெறாதவாறு மின்தடை செய்யப்படுகிறது. அந்த வகையில் தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் கோட்டத்திற்கு உட்பட்ட கல்லாமொழி உப மின்நிலையத்தில் நாளை (வெள்ளிக்கிழமை) பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் ஆலந்தலை, கல்லாமொழி, கந்தசாமிபுரம், கணேசபுரம் மற்றும் உடன்குடி அனல் மின் நிலைய பகுதிகளில் நாளை (ஆக. 26) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!