தமிழகத்தில் நாளை (ஆகஸ்ட் 20) ‘இந்த’ பகுதிகளில் மின்தடை – மின்வாரியம் அறிவிப்பு!

0
தமிழகத்தில் நாளை (ஆகஸ்ட் 20) 'இந்த' பகுதிகளில் மின்தடை - மின்வாரியம் அறிவிப்பு!
தமிழகத்தில் நாளை (ஆகஸ்ட் 20) 'இந்த' பகுதிகளில் மின்தடை - மின்வாரியம் அறிவிப்பு!
தமிழகத்தில் நாளை (ஆகஸ்ட் 20) ‘இந்த’ பகுதிகளில் மின்தடை – மின்வாரியம் அறிவிப்பு!

திருச்சி துவாக்குடி துணை மின் நிலையத்தில் நாளை(சனிக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மின்தடை அறிவிப்பு

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக ஒரு சில இடங்களில் மின்தடை அதிகரித்து வருவதாக புகார்கள் எழுந்து வருகின்றன. இதற்கு காரணம், நாட்டில் தொழிற்சாலைகள், தொழில் நிறுவனங்கள் ஆகியவை அதிகரித்து வருவதால் மின் தேவைகள் அதிகம் தேவைப்படுகிறது. இதனை கருத்தில் கொண்டு மத்திய அரசு மின் உற்பத்தியை அதிகரிக்கும் விதமாக பல புதிய ஒப்பந்தங்களை பல நாடுகளுடன் மேற்கொண்டுள்ளது. மேலும் சூரிய சக்தி மூலம் மின் உற்பத்தி செய்வது அதிகரித்து காணப்படுகிறது. நாட்டில் அனல், நீர், காற்று போன்றவைகள் மூலம் மின்சாரம் தயாரிக்கப்படுகிறது.

சென்னை தினத்தையொட்டி 2 நாட்கள் கலை நிகழ்ச்சிகள் – மாநகராட்சி ஏற்பாடு!

அந்த வகையில் தயாரிக்கப்படும் மின்சாரத்தை துணை மின் நிலையங்கள் வாயிலாக மாநிலம் தோறும் வழங்கப்படுகிறது. மேலும் இந்த துணை மின் நிலையங்கள் மூலம் ஒவ்வொரு மாவட்டங்களிலும் உள்ள பகுதிகளுக்கு மின் விநியோகம் செய்யப்படுகிறது. இத்தகைய மின் நிலையங்களை பராமரிக்க மாதந்தோறும் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. அவ்வாறு பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளும் போது ஊழியர்கள் மற்றும் மக்களின் பாதுகாப்பு கருதி மின்தடை செய்யப்படுகிறது.

இதே போல் திருச்சி துவாக்குடி பகுதியில் நாளை (ஆகஸ்ட் 20) பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் நேரு நகர், அண்ணா வளைவு, ஏ ஓ எல், அஃபர் சாலை, அசூர், அரசு பாலிடெக்னிக், எம்.டி சாலை, ராவுத்தன் மேடு, பெல்நகர், இந்திரா நகர், பெல் டவுன்ஷிப், சி ஏ இ ஆர் மற்றும் பி எச் செட்டர், தேசிய தொழில்நுட்ப கழகம், துவாக்குடி மற்றும் துவாக்குடி தொழிற்பேட்டை, தேனேரிப்பட்டி, பர்மா காலனி, பொய்கைக்குடி, தேவராயனேரி ஆகிய பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்படும் என்று மன்னார்புரம் தமிழ்நாடு மின் உற்பத்தி கழக செயற்பொறியாளர் முத்துராமன் தெரிவித்துள்ளார்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here