தமிழகத்தில் நவம்பர் 1 முதல் பள்ளிகள் திறப்பு ரத்து – அரசுக்கு நிர்வாகங்கள் கோரிக்கை!

4
தமிழகத்தில் நவம்பர் 1 முதல் பள்ளிகள் திறப்பு ரத்து - அரசுக்கு நிர்வாகங்கள் கோரிக்கை!
தமிழகத்தில் நவம்பர் 1 முதல் பள்ளிகள் திறப்பு ரத்து - அரசுக்கு நிர்வாகங்கள் கோரிக்கை!
தமிழகத்தில் நவம்பர் 1 முதல் பள்ளிகள் திறப்பு ரத்து – அரசுக்கு நிர்வாகங்கள் கோரிக்கை!

தமிழகத்தில் வரும் நவம்பர் மாதம் முதல் முழுமையான அளவுடன் பள்ளிகள் திறக்கப்பட இருக்கும் நிலையில், நர்சரி வகுப்புகளுக்கும் பள்ளிகள் திறப்பது தொடர்பான முடிவு ரத்து செய்யப்பட்டு உள்ளது. இந்நிலையில் நர்சரி பள்ளிகள் திறப்பு தொடர்பான தகவல்களை வெளியிட வேண்டும் என அரசுக்கு சம்பந்தப்பட்ட பள்ளி நிர்வாகங்கள் கோரிக்கை வைத்துள்ளது.

பள்ளிகள் திறப்பு

கடந்த 2020ம் ஆண்டு மார்ச் மாதம் உருவான கொரோனா பெருந்தொற்று காரணமாக மூடப்பட்ட பள்ளிகள் இன்று வரையும் முழுமையாக திறக்கப்படவில்லை. இதற்கிடையில் நோய் தொற்று குறைந்து வந்த சூழலில் 9 முதல் 12ம் வகுப்பு வரையுள்ள மாணவர்களுக்கு மட்டும் பள்ளிகள் திறக்கப்பட்டு வகுப்புகள் நடத்தப்பட்டது. அந்த வகையில் தற்போது கொரோனா 2ம் அலைக்கு பின்பாகவும் இந்த வகுப்பு மாணவர்களுக்கு மட்டுமே வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது.

மேலும் இரண்டு வாரங்களுக்கு ஊரடங்கு கட்டுப்பாடுகள் நீட்டிப்பு – பிரதமர் உத்தரவு!

இந்நிலையில் வரும் நவம்பர் மாதம் 1ம் தேதி முதல் 1 லிருந்து 8ம் வகுப்புகளுக்கும் பள்ளிகளில் நேரடி வகுப்புகள் துவங்க இருக்கிறது. இதற்கிடையில் கடந்த வாரத்தில் ஊரடங்கு தொடர்புடைய கட்டுப்பாடுகளில் இருந்து மேலும் சில தளர்வுகளை அளித்திருந்த அரசு, நவம்பர் 1ம் தேதி முதல் நர்சரி வகுப்புகளுக்கும் பள்ளிகளை திறப்பதாக அறிவித்திருந்தது. ஆனால் அந்த அறிவிப்புகள் தவறுதலாக வெளியானது என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பின்னர் தெளிவுபடுத்தினார்.

அந்த வகையில் மழலையர் மற்றும் விளையாட்டு துறை பள்ளிகள் திறப்பது குறித்து மட்டுமே அரசு ஆலோசனை செய்து வந்ததாகவும் பள்ளிகளை திறப்பது குறித்து வெளியானது தவறான செய்தி என்றும் அவர் தெரிவித்திருந்தார். இப்போது மழலையர் மற்றும் விளையாட்டு பள்ளிகள் அனைத்தும் இயங்காமல் உள்ளதால் அதை நடத்தி வரும் நிர்வாகங்கள் வாடகை உள்ளிட்ட சில பிரச்சனைகளை சந்தித்து வருகின்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக அரசு வழங்கும் ரூ.25,000 ரொக்கப் பரிசு – இல்லம் தேடி கல்வி திட்டம்! முழு விபரம் இதோ!

இது தொடர்பாக மழலையர் பள்ளி நிர்வாகி சாமுவேல் ராஜ் என்பவர், ‘தமிழகத்தில் மழலையர் பள்ளிகள் திறக்கப்படும் தேதியை அரசு அறிவிக்க வேண்டும். தவிர 1ம் வகுப்பு மாணவர்களை பள்ளிக்கு அனுப்புவதற்கு பெற்றோர்களிடையே அச்சம் நிலவுகிறது. இதனை கவனத்தில் கொண்டு அரசாங்கம் முக்கிய முடிவுகளை வேண்டும். மேலும் பள்ளிகளை திறப்பதற்கு முன்னர் மாணவர்கள் பின்பற்ற வேண்டிய முறையான வழிகாட்டு நெறிமுறைகளையம் அறிவிக்க வேண்டும்’ என்று அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளார்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

4 COMMENTS

 1. Two years had already passed without any classes.
  Don’t open schools. What a great idea.??
  Let all govt schools open in shift basis.
  Two sessions.
  Morning as well evening session.
  Create a positive approach in all we do.

 2. Super idea welcome
  All Government school should change as 100% education center. Equally as like private schools. This changes is only really a heaven of world . Education is equal to all. Saraswathi goddess is in all places celebrating with Lakshmi goddess bravely with parvathi goddess. India Barath maathaa of all mupperum devigal. GOD Please create.

 3. Plz… Open the schools..other states have opened.. Willing parents can send their kids to school..rest of the students can stay at home… Simple…

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!