அஞ்சல் துறையில் 10ம் வகுப்பு முடித்தவர்களுக்கு வேலைவாய்ப்பு – ரூ.63000 வரை சம்பளம்! விண்ணப்பங்கள் வரவேற்பு!

0
அஞ்சல் துறையில் 10ம் வகுப்பு முடித்தவர்களுக்கு வேலைவாய்ப்பு - ரூ.63000 வரை சம்பளம்! விண்ணப்பங்கள் வரவேற்பு!
அஞ்சல் துறையில் 10ம் வகுப்பு முடித்தவர்களுக்கு வேலைவாய்ப்பு - ரூ.63000 வரை சம்பளம்! விண்ணப்பங்கள் வரவேற்பு!
அஞ்சல் துறையில் 10ம் வகுப்பு முடித்தவர்களுக்கு வேலைவாய்ப்பு – ரூ.63000 வரை சம்பளம்! விண்ணப்பங்கள் வரவேற்பு!

இந்திய அஞ்சலகத்தில் மோட்டார் துறையில் ஸ்டாஃப் கார் டிரைவர் பணிக்கான காலியிடங்கள் குறித்து முன்னதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது பணிக்கான அனைத்து விவரங்களும் இந்த பதிவில் கொடுக்கப்பட்டுள்ளது.

ஸ்டாஃப் கார் டிரைவர்:

நாட்டின் அஞ்சல் துறை மத்திய அரசின் கட்டுப்பாட்டின் கீழ் செயல்பட்டு வருகிறது. இதற்கான காலிப்பணியிடங்கள் அவ்வப்போது அதிகாரப்பூர்வ இனையதளத்தில் அறிவிக்கப்பட்டு நிர்ணயிக்கப்பட்ட செயல்முறையின் மூலம் பணியாளர்கள் நியமிக்கப்படுகிறார்கள். வந்தபோது அந்த வகையில் அஞ்சல் மோட்டார் சேவைத் துறையின் கீழ் உள்ள ஸ்டாஃப் கார் டிரைவர் பணியிடங்களுக்கு காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணிக்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. indiapost.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளம் மூலமாக விண்ணப்பிக்கலாம்.

டாடா டெக்னாலஜிஸ் நிறுவனத்தில் 1,000 பேருக்கு வேலைவாய்ப்பு – அடுத்த நிதியாண்டில் திட்டம்!

ஸ்டாஃப் கார் டிரைவர் பணிகளுக்கு மொத்தம் 17 காலியிடங்கள் உள்ளதாகவும், நிலை-2 இன் கீழ் ரூ. 19,900 முதல் ரூ. 63,200 வரை சம்பளம் வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், மெயில் மோட்டார் சர்வீஸ் கோயம்புத்தூர் – 11,ஈரோடு பிரிவு 2, நீலகிரி கோட்டம் 1, சேலம் மேற்கு பிரிவு 2, திருப்பூர் பிரிவு 1 போன்ற இடங்களில் முறையாக காலியிடங்கள் உள்ளது. விண்ணப்பதாரர்கள் அங்கீகரிக்கப்பட்ட வாரியம் அல்லது நிறுவனத்தில் இருந்து மெட்ரிகுலேஷன் தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் மற்றும் செல்லுபடியாகும் ஓட்டுநர் உரிமத்தையும் பெற்றிருக்க வேண்டும். விண்ணப்பதாரர் மூன்று வருட ஓட்டுநர் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

அனைத்து ரேஷன் அட்டைதாரருக்கும் ஹாப்பி நியூஸ் – மேரா ரேஷன் செயலியை பதிவிறக்கம் செய்வது எப்படி?

18 முதல் 56 வயதுக்கு உட்பட்டவர்கள் பணிக்கு விண்ணப்பிக்கலாம். விண்ணப்பத்துடன் அரசிதழ் அதிகாரி / சுய சான்றொப்பமிடப்பட்ட சான்றளிக்கப்பட்ட பிறந்த தேதிக்கான சான்று, கல்வித் தகுதி, ஓட்டுநர் அனுபவச் சான்றிதழ், SC/ST/OBC/EWS/ESM/ சான்றிதழ், ஓட்டுநர் உரிமம், தொழில்நுட்ப தகுதி சான்றிதழ் போன்றவற்றை இணைக்க வேண்டும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் “The Manager, Mail Motor Service, Goods Shed Roads, Coimbatore, 641001” என்ற முகவிற்கு மார்ச் 15ம் தேதிக்குள் அனுப்ப வேண்டும்.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here