TNPSC Group 4 VAO தேர்வுக்கு தயாராகி வருவோர் கவனத்திற்கு – பதவி வாரியாக காலிப்பணியிடங்கள்!

0
TNPSC Group 4 VAO தேர்வுக்கு தயாராகி வருவோர் கவனத்திற்கு - பதவி வாரியாக காலிப்பணியிடங்கள்!
TNPSC Group 4 VAO தேர்வுக்கு தயாராகி வருவோர் கவனத்திற்கு - பதவி வாரியாக காலிப்பணியிடங்கள்!
TNPSC Group 4 VAO தேர்வுக்கு தயாராகி வருவோர் கவனத்திற்கு – பதவி வாரியாக காலிப்பணியிடங்கள்!

TNPSC குரூப் 4 தேர்வு மூலம் அரசின் பல்வேறு துறைக்குத் தேவையான பணியாளர்கள் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். இந்த தேர்வுக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு சில தினங்களுக்கு முன்பு வெளியானது. அந்த வகையில் டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வுக்கான பதவி வாரியாக காலிப் பணியிடங்கள் விவரங்களை வெளியிட்டு உள்ளது.

காலிப்பணியிட விவரங்கள்:

தமிழ்நாடு அரசுப் பணியாளர்கள் தேர்வாணையத்தின் கீழ் அரசுப் பணிகள் பெரும்பாலானவற்றுக்கு தேர்வுகள் நடத்தப்படுகின்றன. குரூப் -1, குரூப் -2, குரூப் -4 என்ற பிரிவின் கீழ் நடத்தப்படும் தேர்வுகளில் வெற்றி பெற வேண்டும் என்பது இளைஞர்களின் பெரும் கனவாக உள்ளது. கடந்த 2 ஆண்டுகளில் கொரோனா தாக்கத்தால் போட்டிதேர்வுகள் நடத்தப்படவில்லை. இதனால் அரசு பணிக்கு செல்ல வேண்டும் என்று காத்திருந்தவர்கள் ஏமாற்றம் அடைந்தனர். தற்போது தாக்கம் படிப்படியாக குறைந்து வருவதால் போட்டிதேர்வு அறிவிப்புகள் வெளியாகி வருகிறது. இதையடுத்து குரூப் 2,2A தேர்வு குறித்த அறிவிப்பு வெளியானதை தொடர்ந்து அரசுத் துறைகளில் 4 ஆம் நிலை பதவிகளை நிரப்ப நடத்தப்படும் தேர்வு குரூப் 4 தேர்வு அறிவிப்பிற்காகவும் தேர்வர்கள் காத்திருந்தனர்.

தமிழகத்தில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு கால அட்டவணை மாற்றம்? ஆசிரியர்கள் முக்கிய கோரிக்கை!

குரூப் 4 தேர்வுக்கான தேதி மற்றும் காலிப் பணியிடங்களின் எண்ணிக்கை உள்ளிட்ட அறிவிப்பை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய தலைவர் கா.பாலசந்திரன் மார்ச் 29 அன்று வெளியிட்டார். அதன்படி, 7,301 காலிப் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஜூலை 24ம் தேதி தேர்வு நடைபெறவுள்ளது. இந்த தேர்வுக்கு தான் அதிகமான போட்டிகள் நிலவி வருகிறது. ஏனென்றால் இந்த தேர்வுக்கு ஒரே ஒரு எழுத்துத் தேர்வு மட்டுமே நடைபெறும். இதில் சில ஆண்டுகளுக்கு முன் VAO பதவிகளுக்கான தேர்வும் சேர்த்தே நடத்தப்படுகிறது. இந்த குரூப் 4 தேர்வானது இளநிலை உதவியாளர் (Junior Assistant), தட்டச்சர் (Typist),சுருக்கெழுத்து தட்டச்சர் (Steno-Typist), கிராம நிர்வாக அலுவலர் (Village Administrative Officer), வரித் தண்டலர் (Bill Collector), நில அளவர் (Field Surveyor), வரைவாளர் (Draftsman) ஆகிய 7 பதவிகளுக்காக நடத்தப்பட்டு வருகிறது.

அதன்படி, கிராம நிர்வாக அலுவலர் (விஏஓ) பதவியில் 274 காலி பணியிடங்கள், இளநிலை உதவியாளர் பதவியில் 3681 காலிப் பணியிடங்கள், பில் கலெக்டர் பதவியில் 50 காலிப் பணியிடங்கள், தட்டச்சர் பதவியில் 2108 காலிப் பணியிடங்கள், ஸ்டோர் கீப்பர் பதவியில் 1 காலிப்பணியிடம், சுருக்கெழுத்து தட்டச்சர் பதவியில் 1024 காலிப் பணியிடங்கள் மற்றும் வீட்டு வசதி வாரியம், நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தில் இளநிலை உதவியாளர், தட்டச்சருக்கு 163 பணியிடங்கள் என மொத்தம் 7382 காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!