அஞ்சல் துறையின் சூப்பர் திட்டம் – சேமிப்பு பணம் இரட்டிப்பு! முழு விவரம் இதோ!

0
அஞ்சல் துறையின் சூப்பர் திட்டம் - சேமிப்பு பணம் இரட்டிப்பு! முழு விவரம் இதோ!
அஞ்சல் துறையின் சூப்பர் திட்டம் - சேமிப்பு பணம் இரட்டிப்பு! முழு விவரம் இதோ!
அஞ்சல் துறையின் சூப்பர் திட்டம் – சேமிப்பு பணம் இரட்டிப்பு! முழு விவரம் இதோ!

தற்போது கிசான் விகாஸ் பத்ரா திட்டம் என்ற அஞ்சலக சேமிப்பு திட்டத்தின் மூலம் பயனர்கள் தங்களது சேமிப்பு பணத்தை இரட்டிப்பாக பெற முடியும். இந்த கணக்கில் இருக்கும் நன்மைகள் குறித்த முழு விவரங்களையும் இப்பதிவில் விரிவாக காணலாம்.

அஞ்சலக திட்டம்

இந்திய அஞ்சல் துறை, பணத்தைச் சேமிக்க அல்லது பாதுகாப்பான திட்டத்தில் பங்களிக்க விரும்பும் நபர்களுக்கு ஏராளமான முதலீட்டு வாய்ப்புகளை வழங்குகிறது. அந்த வகையில் அதிக ஆபத்தை விரும்பாதவர்களுக்கு இந்த அஞ்சல் அலுவலகத் திட்டங்கள் ஒரு சிறந்த சேமிப்புத் தேர்வாக இருக்கும்.
மேலும் இந்தியா போஸ்ட் திட்டங்கள் அரசாங்கத்தால் ஆதரிக்கப்படுவதால் பாதுகாப்பானதாகவும் கருதப்படுகிறது. இந்த அஞ்சலக சேமிப்புத் திட்டங்களின் கீழ் கிடைக்கும் பல திட்டங்களுக்கு முதலீட்டாளர்கள் பெறக்கூடிய பிரிவு 80Cன் கீழ் வரி விலக்கு அளிக்கப்படும் என்பது கூடுதல் நன்மையாகும்.

Exams Daily Mobile App Download

அந்த வகையில் கடந்த 1988ம் ஆண்டில் முதன்முதலில் தொடங்கப்பட்ட கிசான் விகாஸ் பத்ரா திட்டம் பயனர்களுக்கு 6.9 சதவீத வட்டி விகிதத்தை வழங்கிறது. அத்தகைய திட்டத்தில் பங்குபெற விரும்புபவர்கள் இதில் கிடைக்கும் நன்மைகளை அறிந்து கொள்வது அவசியம் ஆகும். இந்த சேமிப்பு திட்டத்தில், வட்டி விகிதம் ஆண்டுதோறும் கூட்டப்படுகிறது என்பதால் முதலீடு செய்யப்பட்ட தொகை 10 ஆண்டுகள் மற்றும் 4 மாதங்களில் இரட்டிப்பாகும். இந்த கணக்கைத் தொடங்க குறைந்தபட்சத் தொகை ரூ. 1,000 தேவைப்படும். மேலும் அதிகபட்ச வரம்பு இதற்கு இல்லை.

இந்தியா போஸ்ட் இணையதளத்தின்படி, ஒரு வயது குழந்தை முதல் பெரியவர்கள் வரைக்கும் இந்த கணக்கை திறக்கலாம். மேலும் இத்திட்டத்தின் கீழ் எத்தனை கணக்குகளை வேண்டுமானாலும் திறக்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த கணக்குகளுக்கான முதிர்ச்சியை பொருத்தளவு வைப்புத் தேதியில் பொருந்தக்கூடிய வகையில், நிதி அமைச்சகத்தால் அவ்வப்போது பரிந்துரைக்கப்படும் முதிர்வுக் காலத்தில் கணக்கு வைப்பு முதிர்ச்சியடையும். அதாவது, திட்டம் 124 மாதங்களில் முதிர்ச்சியடையும் போது, லாக்-இன் காலம் 30 மாதங்களாக இருக்கும்.

பிரபல தனியார் நிறுவனத்தில் 190+ காலிப்பணியிடங்கள் அறிவிப்பு – உடனே விரையுங்கள்..!

இப்போது கீழே கொடுக்கப்பட்டுள்ள பின்வரும் நிபந்தனைகளுக்கு உட்பட்டு ஒருவர் KVP கணக்கை எந்த நேரத்திலும் முதிர்வுக்கு முன் முன்கூட்டியே மூடலாம் என்பது வாடிகையாளர்களுக்கு தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. அந்த வகையில் ஒரு ஒற்றைக் கணக்கு, அல்லது கூட்டுக் கணக்கில் ஏதேனும் ஒன்று அல்லது அனைத்து கணக்கு வைத்திருப்பவர்களும் இறக்கும் போது, வர்த்தமானி அதிகாரியாக இருப்பதன் மூலம் உறுதிமொழி எடுக்கப்படும் போது, நீதிமன்றத்தின் உத்தரவின் போது, டெபாசிட் செய்யப்பட்ட நாளிலிருந்து 2 ஆண்டுகள் மற்றும் 6 மாதங்களுக்கு பிறகு கணக்கை மூடலாம்.

மேலும், நாமினி/சட்ட வாரிசுகளுக்கு கணக்கு வைத்திருப்பவரின் மரணம், கணக்கு வைத்திருப்பவர் முதல் கூட்டு வைத்திருப்பவர் வரை இறந்தால், நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் அல்லது குறிப்பிட்ட அதிகாரியிடம் கணக்கை அடகு வைக்கும்போது இந்த கணக்கை ஒருவரிடமிருந்து மற்றொரு நபருக்கு மாற்ற முடியும். தவிர இந்தத் திட்டத்தில் முதலீடு செய்பவர்கள் தங்கள் கேவிபி சான்றிதழை பிணையமாகவோ அல்லது பத்திரமாகவோ பயன்படுத்தி பாதுகாப்பான கடன்களைப் பெறலாம். அத்தகைய கடன்களுக்கான வட்டி விகிதம் ஒப்பீட்டளவில் குறைவாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!