
உடனே சேருங்க.. Post Office-ன் அசத்தல் சேமிப்பு திட்டம் – வட்டியோட முழுசா 14 லட்சம் கையில கிடைக்கும்!
அஞ்சலகத்தில் நடைமுறையில் உள்ள சேமிப்பு திட்டங்கள் முதலீட்டாளர்களுக்கு நல்லதொரு லாபத்தை தருகிறது. அத்தகைய திட்டங்களில் ஒன்று தான் தேசிய சேமிப்பு பத்திரம். தற்போது இத்திட்டம் குறித்த முழு விவரங்களையும் இப்பதிவில் காண்போம்.
தேசிய சேமிப்பு பத்திரம்:
இந்திய மக்கள் தற்போது சேமிப்பு திட்டங்களில் சேர ஆர்வம் காண்பித்து வருகின்றனர். இவர்களுக்கு உதவும் வகையில் அஞ்சல் துறை, பல்வேறு வகையான சேமிப்பு திட்டங்களை அறிமுகப்படுத்தி வருகிறது. இந்த திட்டங்களில் முதலீட்டாளர்களுக்கு அதிக லாபம், வட்டி போன்றவைகள் கிடைக்கிறது. தற்போது அஞ்சலக திட்டங்களில் வரி சலுகையும் கிடைக்கிறது. மக்கள் அதிக லாபம் தரக்கூடிய மற்றும் பணத்தை இரட்டிப்பாகும் திட்டங்களை எதிர்பார்க்கின்றனர். இவர்களுக்கு தேசிய சேமிப்பு பத்திர திட்டம் சிறந்த தேர்வாகும்.
இந்த திட்டத்தில் 18 வயது நபர்கள் இணையலாம். மேலும் 10 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளின் பெயர்களில் பெற்றோர்கள் மற்றும் பாதுகாவலர்கள் இணைந்து ஜாயிண்ட் அக்கவுண்ட் தொடங்கலாம். இந்த ஜாயிண்ட் அக்கவுண்டில் 3 பேர் வரை இணைத்து கொள்ளலாம். இதில் கணக்கு வைத்திருப்பவர்கள் அல்லது விண்ணப்பதாரர்கள் இறந்து விட்டால் நீதிமன்ற உத்தரவின் பேரில் இடையில் முடித்துக் கொள்ளும் வாய்ப்பு அளிக்கப்படுகிறது. மேலும் இதில் குறைந்தபட்ச டெபாசிட் தொகை ரூ.1000 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தில் முதிர்வு காலம் 5 வருடங்கள் ஆகும்.
தமிழக அரசு பள்ளிகளில் இலவச காலை உணவுத் திட்டம் – செப். 15 முதல் துவக்கம்!
Exams Daily Mobile App Download
இந்த திட்டத்தில் வட்டி விகிதம் வருடத்திற்கு ஒரு முறை கணக்கிடப்படுகிறது. தற்போது வட்டி விகிதம் 6.8% ஆக வழங்கப்பட்டு வருகிறது. இதற்கு வருமான வரி சட்டம் 80சி பிரிவின் கீழ் வரி விலக்கு உள்ளது. மேலும் இந்த பத்திரத்தை வைத்து கடன் வசதியும் பெறலாம். இதில் ஒரு வருடத்திற்கு பிறகு மூன்று ஆண்டுகளுக்குள் முடித்துக் கொண்டால் உங்களின் சேமிப்பு கணக்கிற்கு கிடைக்கும் வட்டி மட்டுமே வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. அத்துடன் வருமான வரி சட்டம் 80சி பிரிவின் கீழ் 1.5 லட்சம் ரூபாய் வரையில் வரிச் சலுகை உண்டு. இந்த தேசிய சேமிப்பு பத்திர திட்டத்தில் 5 வருடங்களில் 10 லட்சம் முதலீடு செய்தால் 14 லட்சமாக திரும்ப பெறலாம்.
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்