Post Office ன் செல்வ மகள் சேமிப்பு திட்டத்தில் வட்டி விகிதம் அதிகரிப்பு – மக்கள் மகிழ்ச்சி!

0
Post Office ன் செல்வ மகள் சேமிப்பு திட்டத்தில் வட்டி விகிதம் அதிகரிப்பு - மக்கள் மகிழ்ச்சி!
Post Office ன் செல்வ மகள் சேமிப்பு திட்டத்தில் வட்டி விகிதம் அதிகரிப்பு - மக்கள் மகிழ்ச்சி!
Post Office ன் செல்வ மகள் சேமிப்பு திட்டத்தில் வட்டி விகிதம் அதிகரிப்பு – மக்கள் மகிழ்ச்சி!

ரெப்போ விகிதத்தின் அடிப்படை புள்ளிகள் உயர்த்தப்பட்டுள்ளதால் அரசின் சேமிப்பு திட்டங்களான செல்வமகள் சேமிப்பு திட்டத்தின் வட்டிவிகிதம் உயர வாய்ப்புள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

செல்வ மகள் சேமிப்பு திட்டம்:

பெண் குழந்தைகளின் நலனுக்காக சுகன்யா சம்ரிதி யோஜனா என்கிற திட்டம் மத்திய அரசால் செயல்படுத்தப்பட்டு வருகிறது. மிகவும் பாதுகாப்பான முதலீடு திட்டமான செல்வமகள் சேமிப்பு திட்டத்தில் ஒரு ஆண்டிற்கு மட்டுமே 7.6% வரைக்கும் வட்டி வழங்கப்பட்டு வருகிறது. பத்து வயது நிரம்பிய பெண் குழந்தைகள் செல்வமகள் சேமிப்பு திட்டத்தில் இணைந்து கொள்ளலாம். மேலும், மகளுக்கு 18 வயது ஆகும் வரைக்கும் பெற்றோர்கள் அல்லது காப்பாளர் தான் இந்த சேமிப்பு திட்டத்தின் கணக்கை கையாளவேண்டும்.

Exams Daily Mobile App Download

மேலும், செல்வமகள் சேமிப்பு திட்டம் குறித்தான விழிப்புணர்வு மக்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. போஸ்ட் ஆபீஸ் மற்றும் பொதுத்துறை வங்கியின் மூலமாகவும் செல்வமகள் சேமிப்பு திட்டத்தில் இணைந்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், வரும் ஜூலை மாதம் முதல் இத்திட்டத்திற்கான வட்டி விகிதம் உயர வாய்ப்புள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. ppf,nsc, ssy திட்டத்திற்கான வட்டி விகிதங்களும் உயர வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ரெப்போ விகிதத்தை 0.50% வரைக்கும் ரிசர்வ் வங்கி உயர்த்திய பிறகு செல்வமகள் சேமிப்பு திட்டத்துக்கான வட்டி விகிதம் உயர்த்தப்பட அதிக வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக 11ம் வகுப்பு பொதுத்தேர்வில் மாணவர்களை மிஞ்சிய மாணவிகள் – வெளியான தகவல்!

தற்போது ரெப்போ விகிதம் ஒரு மாதத்தில் மட்டுமே 90 அடிப்படை புள்ளிகள் அதிகரித்து உள்ளதாக ரிசர்வ் வங்கி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இதனால் அரசின் சேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதம் 0.50% முதல் 0.75% வரைக்கும் உயர வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, பொது வருங்கால வைப்பு நிதி, செல்வமகள் சேமிப்பு, என்எஸ்சி போன்ற அரசு சேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதங்கள் வரும் ஜூலை 1 ஆம் தேதி முதல் உயர வாய்ப்புள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!