போஸ்ட் ஆபிஸின் அசத்தலான திட்டம் – ஜாக்பாட் வட்டி விகிதம்.. முழு விவரம் இதோ!
மக்களுக்கு உதவும் வகையில் அஞ்சலகங்கள் பல்வேறு சேமிப்பு திட்டங்களை வழங்கி வருகிறது. இத் திட்டங்களில் ஒன்றான போஸ்ட் ஆபிஸ் டைம் டெபாசிட் திட்டம் குறித்த விவரங்களை பதிவில் காண்போம்.
சேமிப்பு திட்டம்:
இந்தியாவில் மக்கள் அதிக அளவில் அஞ்சலகத்தில் முதலீடு செய்வதற்கு காரணம் தற்போது நல்ல வட்டி விகிதம் வழங்கப்படுகிறது. அத்தகைய திட்டங்களில் ஒன்று போஸ்ட் ஆபீஸ் டைம் டெபாசிட் திட்டம். இத்திட்டத்தில் குறைந்தபட்சம் ரூ.1000 செலுத்தி கணக்கை தொடங்கலாம். திட்டத்தின் முக்கிய அம்சம் என்னவென்றால் டெபாசிட் செய்யப்படும் தொகைக்கு வரம்பு எதுவும் கிடையாது. அதிகபட்சமாக 5 ஆண்டுகள் வரை முதலீடு செய்யலாம். உங்களது முதலீட்டு தொகைக்கு 7.5% வட்டி விகிதம் வழங்கப்படுகிறது.
Follow our Instagram for more Latest Updates
இந்த வட்டி விகிதமானது நீங்கள் தேர்ந்தெடுக்கும் ஆண்டை பொறுத்து மாறுபடும். உதாரணமாக ஒரு ஆண்டுக்கு முதலீடு செய்தல் 6.9 சதவீதமும் 3 ஆண்டுகள் வரையிலான முதலீட்டுக்கு 7% வட்டி வீதமும் வழங்கப்படும். இந்தத் திட்டத்தில் ஒரு முதலீட்டாளர் ரூ. 2 லட்சம் வரை டெபாசிட் செய்தால் 5 ஆண்டுகளுக்கு பிறகு ரூ. 2,24,974 வட்டி கிடைக்கும். 80C பிரிவின் கீழ் வரி விலக்கு பலன்களும் வழங்கப்படும்.