Post Office இல் சீனியர் சிட்டிசன்களுக்கான சூப்பர் சேமிப்பு திட்டங்கள் – முழு விபரம் இதோ!

0
Post Office இல் சீனியர் சிட்டிசன்களுக்கான சூப்பர் சேமிப்பு திட்டங்கள் - முழு விபரம் இதோ!
Post Office இல் சீனியர் சிட்டிசன்களுக்கான சூப்பர் சேமிப்பு திட்டங்கள் - முழு விபரம் இதோ!
Post Office இல் சீனியர் சிட்டிசன்களுக்கான சூப்பர் சேமிப்பு திட்டங்கள் – முழு விபரம் இதோ!

இந்தியாவில் 60 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்களுக்கு மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டம் (SCSS) அஞ்சல் அலுவலகத்தில் அமலில் உள்ளது. மேலும் 55 வயதுக்கு மேற்பட்ட மற்றும் 60 வயதுக்கு குறைவான விண்ணப்பதாரர்களும் இந்த கணக்கை தொடங்கலாம். இது குறித்த முழு விபரங்களை இப்பதிவில் காணலாம்.

சேமிப்பு திட்டங்கள்:

குழந்தைகள் முதல் மூத்த குடிமக்கள் வரை அனைவருக்கும் Post Office இல் சிறந்த சேமிப்பு திட்டங்கள் அமலில் உள்ளது. அதன்படி ஓய்வு பெற்றவர்களுக்கு மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டம் ஒரு நல்ல முதலீடாக உள்ளது. இந்த சேமிப்பு திட்டத்தின் முதிர்வு காலம் 5 ஆண்டுகள் ஆகும். இதில் சந்தாதாரர் தனிப்பட்ட கணக்கு அல்லது உங்கள் மனைவியுடன் கூட்டு கணக்காகவும் தொடங்கலாம். மேலும் மனைவி ஒரு மூத்த குடிமகனாக இருக்க வேண்டிய அவசியமில்லை. மேலும் கூட்டுக் கணக்கில் அதிகபட்ச Deposit வரம்பு ரூ.15 லட்சம் மட்டுமே.

Vodafone Idea வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு – விரைவில் 5G பிரீமியம் அறிமுகம்!

அதுமட்டுமின்றி கணக்கை ஒரு தபால் நிலையத்திலிருந்து மற்றொரு தபால் நிலையத்திற்கு எளிதாக மாற்ற முடியும். இந்த திட்டத்தை தொடங்கிய ஒரு வருடத்திற்குப் பிறகு டெபாசிட் செய்யப்பட்ட தொகையில் 1.5% மற்றும் இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு டெபாசிட் செய்யப்பட்ட தொகையில் 1% கழிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த திட்டத்தில் குறைந்தபட்ச முதலீடு ரூ. 1000 மற்றும் அதிகபட்சம் ரூ. 15 லட்சம். மேலும் விருப்ப ஓய்வு அல்லது ஓய்வு பெற்றவராக இருந்தால் 55 – 60 வயதுக்கு இடைப்பட்டவரும் இதில் கணக்கு தொடங்கலாம். மூத்த குடிமக்கள் திட்டத்தின் வட்டி விகிதம் ஒவ்வொரு வருடமும் மத்திய அரசால் தீர்மானிக்கப்படுகிறது. தற்போது இது 7.4% ஆக உள்ளது.

Exams Daily Mobile App Download

அஞ்சல் அலுவலக மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டத்தில் முதலீடு செய்ய, விண்ணப்பதாரர்கள் பின்வரும் ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும்:

  • வங்கி அல்லது தபால் அலுவலகத்தில் கிடைக்கும் விண்ணப்பப் படிவத்தை நிரப்பவும்
  • KYC படிவம்
  • நிரந்தர கணக்கு எண் (PAN) அட்டை
  • முகவரி ஆதாரம்
  • சமீபத்திய புகைப்படம்
  • வயது சான்று
  • ஆதார் அட்டை
  • ஓய்வூதிய பலன்கள் வழங்கும் தேதி
  • ஓய்வூதிய விஆர்எஸ் அல்லது ஓய்வுக்காலம்

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!