Post office இல் உள்ள சிறப்பான திட்டங்கள் – 2 மடங்காக கிடைக்கும் முதலீடு!

0
Post office இல் உள்ள சிறப்பான திட்டங்கள் - 2 மடங்காக கிடைக்கும் முதலீடு!
Post office இல் உள்ள சிறப்பான திட்டங்கள் - 2 மடங்காக கிடைக்கும் முதலீடு!
Post office இல் உள்ள சிறப்பான திட்டங்கள் – 2 மடங்காக கிடைக்கும் முதலீடு!

இந்திய அஞ்சல் துறையில் பல்வேறு சேமிப்பு திட்டங்கள் நடைமுறையில் உள்ளது. இத்திட்டங்களில் குறைந்த முதலீடு செலுத்துவதன் மூலமாக அதிக லாபங்களை பெறலாம். தற்போது இதில் உள்ள சேமிப்பு திட்டங்கள் குறித்து விரிவாக பார்க்கலாம்.

சேமிப்பு திட்டங்கள்

கொரோனா காரணமாக பல்வேறு பொருளாதார நெருக்கடி நிலையை பொதுமக்கள் சந்தித்து வருகின்றனர். அதனால் பாதுகாப்பான முதலீட்டில் தங்கள் பணத்தை சேமிப்பை தொடங்க விரும்பினர். இதையடுத்து குறைந்த முதலீட்டில் அதிக வட்டி தொகையை சேமிக்க இந்திய அஞ்சல் துறையில் பல்வேறு சேமிப்பு திட்டங்கள் உள்ளது. அத்துடன் குறைந்த நாட்களில் அதிக தொகையை சேமிக்க முடியும். அதனால் மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது. அத்துடன் இத்திட்டங்களில் குறைந்தபட்சமாக ரூ.1000 முதல் செலுத்தி கொள்ள முடியும்.

Post Office இன் செல்வ மகள் சேமிப்பு திட்டம் – ரூ.5 லட்சம் வரை ரிட்டன்ஸ்! முழு விபரம் இதோ!

முதலாவதாக டைம் டெபாசிட் திட்டத்தை பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ளலாம். இத்திட்டத்தில் 1 முதல் 3 ஆண்டு வரை சேமிக்கலாம். ஒவ்வொரு ஆண்டுக்கும் 5.5% வட்டி விகிதம் வழங்கப்படுகிறது. அத்துடன் 5 ஆண்டு முதலீடு செய்தால் முதிர்வு காலம் முடியும் போது 6.7% வரை வட்டித்தொகை கிடைக்கிறது. இதில் 13 ஆண்டுகள் முதலீடு செய்தால் முதிர்வு காலம் முடியும் போது முதலீட்டை இரட்டிப்பாக பெற முடியும். அடுத்ததாக சுகன்யா சம்ரிதி திட்டத்தில் உள்ள பலன்களை பற்றி தெரிந்து கொள்ளலாம்.

இத்திட்டத்தில் பிறந்த குழந்தை முதல் 10 வயது நிரம்பிய பெண் குழந்தைகளின் பெயரில் சேமிப்பு கணக்கை தொடங்கலாம். அவர்களின் பெற்றோர் அல்லது பாதுகாவலர் மூலமாக கணக்கை தொடங்கி கொள்ளலாம். இதில் குறைந்தபட்ச முதலீடாக ரூ.250 மற்றும் அதிகபட்சமாக ரூ.1,50,000 வரை சேமிக்க முடியும். அத்துடன் ஒவ்வொரு ஆண்டுக்கும் 7.6% வட்டி விகிதம் வழங்கப்படுகிறது. மேலும் 9.47 ஆண்டு காலம் சேமித்தால் முதலீடு தொகையை இரட்டிப்பாக பெற முடிகிறது. இத்திட்டத்தில் இருந்து பெறப்படும் தொகையை குழந்தைகளின் உயர்கல்விக்காக பயன்படுத்தி கொள்ளலாம்.

தற்போது இதில் உள்ள சேமிப்பு திட்டங்கள் தரும் பலன்களையும் வட்டி விகிதங்களையும் பார்க்கலாம்.

  • சேமிப்பு கணக்கு திட்டம் – 4.0% வட்டி விகிதம் – 18 ஆண்டுகளில் முதலீடு இரட்டிப்பாகும்
  • RD சேமிப்பு திட்டம் – 5.8% வட்டி விகிதம் – 12.41 ஆண்டுகளில் முதலீடு இரட்டிப்பாகும்
  • மாதாந்திர சேமிப்பு திட்டம் – 6.6% வட்டி விகிதம் – 10.91 ஆண்டுகளில் முதலீடு இரட்டிப்பாகும்
  • மூத்த குடிமக்களுக்கான சேமிப்பு திட்டம் – 7.4% வட்டி விகிதம் – 9 ஆண்டுகளில் முதலீடு இரட்டிப்பாகும்
  • ப்ரோவிடண்ட் ஃபண்ட் திட்டம் – 7.1% வட்டி விகிதம் – 10.41 ஆண்டுகளில் முதலீடு இரட்டிப்பாகும்
  • தபால் நிலைய தேசிய சேமிப்பு சான்றிதழ் – 6.8% வட்டி விகிதம் – 10.59 ஆண்டுகளில் முதலீடு இரட்டிப்பாகும்

    Velaivaippu Seithigal 2022

    To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
    To Join => Whatsapp கிளிக் செய்யவும்
    To Join => Facebookகிளக் செய்யவும்
    To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!