10 வருடத்தில் உங்கள் முதலீட்டை இரட்டிப்பு ஆக்க சிறந்த அஞ்சலக சேமிப்பு திட்டம் – முழு விவரம் இதோ!

0
10 வருடத்தில் உங்கள் முதலீட்டை இரட்டிப்பு ஆக்க சிறந்த அஞ்சலக சேமிப்பு திட்டம் - முழு விவரம் இதோ!
10 வருடத்தில் உங்கள் முதலீட்டை இரட்டிப்பு ஆக்க சிறந்த அஞ்சலக சேமிப்பு திட்டம் - முழு விவரம் இதோ!
10 வருடத்தில் உங்கள் முதலீட்டை இரட்டிப்பு ஆக்க சிறந்த அஞ்சலக சேமிப்பு திட்டம் – முழு விவரம் இதோ!

மக்களுக்கு சேமிப்பு பழக்கத்தை அதிகரிக்க பல சேமிப்பு திட்டங்கள் அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் அஞ்சலகத்தில் உள்ள கிசான் விகாஸ் பத்ரா திட்டம் குறித்து முழு விவரத்தை இந்த பதிவில் பார்க்கலாம்.

சேமிப்பு திட்டம்:

சிறு வயது முதலே நம்மிடம் சேமிக்கும் பழக்கத்தை சொல்லி கொடுத்தே இந்த சமூகம் வளர்த்து இருக்கிறது. அதனால் அனைவரும் சேமிப்பு பழக்கத்தை எதாவது முறையில் செய்ய வேண்டியது கட்டாயமாக இருக்கிறது. அந்த வகையில் அரசு பல சேமிப்பு திட்டங்களை வங்கிகள் மூலம் செயல்படுத்தி வருகிறது. அது மட்டுமில்லாமல் அஞ்சலகங்களில் பல சேமிப்பு திட்டங்கள் அமல்படுத்தப்பட்டு இருக்கிறது. வங்கிகளில் எஃப்டி எனப்படும் நிலையான வைப்புத்தொகைக் கணக்கைத் திறப்பது கடினமான ஒன்றாக சாமானிய மக்களுக்கு இருக்கிறது.

Follow our Instagram for more Latest Updates

ஆனால் அஞ்சலக சேமிப்பு திட்டங்களை தொடங்குவது மிக எளிமையான ஒன்று. மேலும் வட்டி விகிதங்கள் அதிகரித்து கொண்டே இருப்பதால் அவை எதிர்காலத்தில் பயனுள்ளதாக இருக்கின்றன. மேலும் அஞ்சலக சேமிப்பு திட்டங்களில் நீங்கள் முதலீடு செய்யும் பணம் பாதுகாப்பாகவும், நல்ல வருமானமும், ஆபத்து இல்லாமலும் இருப்பதால் பலர் அதில் முதலீடு செய்ய நினைக்கின்றனர். அதில் குறிப்பாக கிசான் விகாஸ் பத்ரா திட்டத்தில் நீங்கள் முதலீடு செய்தால் 10 ஆண்டுகள் மற்றும் 3 மாதங்களில் மொத்தம் 123 மாதங்களில் உங்களுக்கு இரட்டிப்பு தொகை கிடைக்கும்.

தினசரி 2 GB டேட்டா.. குறைவான கட்டணத்தில் Best Recharge Plans – Airtel,Jio, VI, BSNL எது சிறந்தது?

Exams Daily Mobile App Download

இந்த திட்டத்தில் குறைந்தபட்சமாக ரூ.1000 முதலீடு செய்து ஆண்டுதோறும் 7 சதவீதம் சம்பாதிக்கலாம், அதிகபட்ச முதலீட்டு வரம்பு இல்லை மற்றும் வருடந்தோறும் தொகை அதிகரிக்கப்படுகிறது. மேலும் நீங்கள் அவசரத்தேவைகளுக்காக பணம் பெற நினைத்தால், இரண்டு ஆண்டுகள் மற்றும் ஆறு மாதங்களுக்குப் பிறகு இந்த கணக்கிலிருந்து பணத்தை எடுத்துக்கொள்ளலாம். அது மட்டுமில்லாமல் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் இந்த திட்டத்தில் சேரலாம், 18 வயதுக்கு குறைவானவர்கள் கூட்டு கணக்கை திறக்கலாம். இந்த திட்டத்தில் சேர ஆன்லைன் மூலமாக விண்ணப்பப் படிவங்களை பெறலாம் அல்லது உள்ளூர் தபால் நிலைய கிளைகளிலும் பெற்றுக்கொள்ளலாம்.

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!