Post Office இல் சேமிப்பு கணக்கு வைத்திருப்போர் கவனத்திற்கு – முழு விபரங்கள் இதோ!

0
Post Office இல் சேமிப்பு கணக்கு வைத்திருப்போர் கவனத்திற்கு - முழு விபரங்கள் இதோ!
Post Office இல் சேமிப்பு கணக்கு வைத்திருப்போர் கவனத்திற்கு - முழு விபரங்கள் இதோ!
Post Office இல் சேமிப்பு கணக்கு வைத்திருப்போர் கவனத்திற்கு – முழு விபரங்கள் இதோ!

இந்திய அஞ்சல் துறை பல்வேறு சேமிப்பு திட்டங்களை அறிமுகபடுத்தியுள்ளது. தற்போது சேமிப்பு திட்டங்களில் ஆன்லைன் மூலம் சுலபமாக மாத தொகையை செலுத்தலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் டிஜிட்டல் முறையில் செல்வ மகள் திட்டத்துக்கு மாத தொகையை செலுத்துவது பற்றி விரிவாக பார்க்கலாம்.

டிஜிட்டல் முறை

தற்போது கொரோனா பெருந்தொற்றின் காரணமாக பொதுமக்கள் பொருளாதார இழப்புகளை சந்தித்து வருகின்றனர். இதனால் பொதுமக்கள் தொடர்ந்து வருவாயை பெற பாதுகாப்பான முதலீட்டில் கவனம் செலுத்த தொடங்கினர். தற்போது இந்திய அஞ்சல் துறை பொதுமக்கள் நலனை கருத்தில் கொண்டு பல்வேறு சேமிப்பு திட்டங்களை அறிமுகப்படுத்தி வருகிறது. இந்த சேமிப்பு திட்டங்களில் அதிக முதலீடுகளை செலுத்தத் தொடங்கின. இந்த சேமிப்பு திட்டத்தின் மூலம் குறைந்த முதலீடு செலுத்துவதன் மூலமாக அதிக வட்டிகளை பெற முடியும். மத்திய அரசால் அறிமுகப்படுத்தப்பட்ட சேமிப்பு திட்டங்களான ரெக்கரிங் டெபாசிட் திட்டம், பிபிஎஃப், செல்வ மகள் போன்ற சேமிப்பு திட்டங்கள் உள்ளன.

தமிழகத்தில் டிச.25 முதல் ஜன.2 வரை பள்ளிகளுக்கு விடுமுறை – அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவிப்பு!

கூடுதலாக, இந்த சேமிப்பு திட்டத்திற்கு ஆன்லைன் வழியாக மாத தொகை செலுத்தலாம் என அறிவிப்புகள் வெளியாகியுள்ளது. இதற்கு முதலில் டிஜிட்டல் சேமிப்பு கணக்கை தொடங்க வேண்டும். தற்போது செல்வ மகள் சேமிப்பு திட்டத்தில் டிஜிட்டல் முறையில் மாத தொகையை செலுத்துவது பற்றி விரிவாக பார்ப்போம். இதற்கு முதல் கட்டமாக IPPB மொபைல் பேங்கிங் என்ற செயலியை பதிவிறக்கம் செய்ய வேண்டும். பின்பு அதனுள் 4 இலக்க MPIN-ஐ உள்ளீட்டு எண்ணை அளித்து தங்கள் கணக்கில் நுழைய வேண்டும். அடுத்ததாக ‘DOP சேவைகள்’ என்பதை கிளிக் செய்து பின் ‘சுகன்யா சம்ரித்தி கணக்கு’ என்பதை கிளிக் செய்ய வேண்டும்.

டிசம்பர் 24 முதல் ஜனவரி 20 வரை முழு ஊரடங்கு அமல் – அரசு உத்தரவு!

அதன் பின் SSA கணக்கு எண் மற்றும் DOP வாடிக்கையாளர் ஐடியை உள்ளிட வேண்டும். இதையடுத்து வைப்பு தொகையை உள்ளிட்டு ‘பணம்’ என்பதை தேர்ந்தெடுக்க வேண்டும். அடுத்ததாக செலுத்த வேண்டிய தொகையை உறுதிசெய்து ‘உறுதிப்படுத்து’ என்பதை கிளிக் செய்ய வேண்டும். இப்பொழுது பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணிற்கு OTP அனுப்பப்படும். அந்த OTP எண்ணை உள்ளிட்டு ‘சமர்ப்பி’ என்பதை கிளிக் செய்ய வேண்டும். இறுதியாக தாங்கள் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணிற்கு மாத தொகையை செலுத்தியதற்கான செய்தி பெறப்படும்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!