Post Office சேமிப்பு திட்டம் – ரூ.4 லட்சம் வரை முதிர்வுத்தொகை பெறலாம்! முழு விவரம் இதோ!

0
Post Office சேமிப்பு திட்டம் - ரூ.4 லட்சம் வரை முதிர்வுத்தொகை பெறலாம்! முழு விவரம் இதோ!
Post Office சேமிப்பு திட்டம் - ரூ.4 லட்சம் வரை முதிர்வுத்தொகை பெறலாம்! முழு விவரம் இதோ!
Post Office சேமிப்பு திட்டம் – ரூ.4 லட்சம் வரை முதிர்வுத்தொகை பெறலாம்! முழு விவரம் இதோ!

அஞ்சலகத்தில் 5 ஆண்டுகள் முதலீடு திட்டத்தில் முதிர்வுத் தொகையாக 4,87,877 ரூபாயை திரும்ப பெறலாம். இந்த திட்டத்தின் நன்மைகள் மற்றும் ஆன்லைன் மூலம் பணம் செலுத்தும் முறைகள் குறித்த முழு விவரங்கள் பற்றி இப்பதிவில் காண்போம்.

முதலீட்டு திட்டம்:

இந்தியாவில் பெரும்பாலான மக்கள் வங்கிகளுக்கு இணையாக அஞ்சலக சேமிப்பு திட்டத்தில் முதலீடு செய்வதில் ஆர்வம் காட்டி வருகின்றனர். வங்கிகளை விட அஞ்சலகங்கள் அதிக வட்டியை அளிக்கிறது. முதலீடு திட்டங்கள், சேமிப்பு திட்டங்கள், பிக்சட் டெபாசிட் திட்டங்கள், பென்ஷன் திட்டம் போன்று மக்கள் பயன்பெறும் பல்வேறு வகையான திட்டங்கள் உள்ளது. ஒவ்வொரு திட்டத்திற்கு தனித்தனி விதிமுறைகளும் வட்டி விகிதங்களும் உள்ளது. மற்ற முதலீடு திட்டங்களை தொடர்ந்து RD எனப்படும் ரெக்கரிங் டெபாசிட் திட்டம் முதலீடு தொகையை வழங்குகிறது.

தமிழக தனியார் பள்ளிகளில் 75% கல்விக்கட்டணம் வசூல் – அரசாணை வெளியீடு!

இந்த திட்டத்திற்கு தற்போது 5.8 சதவீதம் வட்டி வழங்கப்படுகிறது. இதில் செலுத்தும் முதிர்வு தொகையை பொறுத்து வட்டித்தொகை மாறுபடுகிறது. அதாவது ஒருவர் மாதம் ரூ.7000 சேமித்தால் 5 ஆண்டுகளில் நீங்கள் முதலீடு செய்யும் தொகைக்கு வட்டியும் சேர்த்து சேர்த்து 4,87,877 ரூபாய் முதிர்வு தொகையாக உங்களுக்கு கிடைக்கும். RD திட்டத்தின் இன்னொரு நன்மை என்னவென்றால் இந்த திட்டத்தை நீங்கள் 10 ஆண்டு வரை கூட நீட்டிக்கலாம். இந்த திட்டத்தில் வாடிக்கையாளர்கள் ஒரு முறை வங்கி சென்று கணக்கு தொடங்கிவிட்டால் அடுத்தடுத்த மாதங்களில் வீட்டிலிருந்தே இந்திய போஸ் பேமென்ட் வங்கியின் செயலி மூலம் பணம் செலுத்தலாம்.

ஆன்லைன் மூலம் பணம் செலுத்தும் முறைகள்:
  • இந்திய போஸ் பேமெண்ட் வங்கி செயலியில் முகப்பு பக்கத்தில் இருக்கும் DOP Products என்பதை கிளிக் செய்து RD என்பதை தேர்ந்தெடுக்கவும்.
  • அங்கு பக்கத்தில் உங்களுடைய RD கணக்கு எண் மற்றும் உங்களின் ID ஆகியவற்றை பதிவிடவும்.
  • பணம் செலுத்துவதற்கு Installment duration என்பதைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.
  • அடுத்ததாக Payment transfer என்பதை கிளிக் செய்து உங்கள் RD தொகையை செலுத்தலாம்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!