Post Office சேமிப்பு கணக்கினை ஆன்லைனில் ஓபன் செய்வது எப்படி? எளிய வழிமுறைகள் இதோ!

0
Post Office சேமிப்பு கணக்கினை ஆன்லைனில் ஓபன் செய்வது எப்படி? எளிய வழிமுறைகள் இதோ!
Post Office சேமிப்பு கணக்கினை ஆன்லைனில் ஓபன் செய்வது எப்படி? எளிய வழிமுறைகள் இதோ!
Post Office சேமிப்பு கணக்கினை ஆன்லைனில் ஓபன் செய்வது எப்படி? எளிய வழிமுறைகள் இதோ!

ஆன்லைன் மூலம் வீட்டிலிருந்தே அஞ்சலக சேமிப்பு கணக்கை தொடங்கலாம். அதற்கான எளிய வழிமுறைகள் குறித்து இப்பதிவில் காண்போம். போஸ்ட் ஆபீஸ் மொபைல் பேங்கிங் வசதியை பயன்படுத்துவது பற்றியும் பார்ப்போம்.

அஞ்சல் கணக்கு:

இந்தியாவில் அஞ்சல் நிலைய சேமிப்பு கணக்குகள் மக்களிடம் நம்பக தன்மையை பெற்றுள்ளது. அஞ்சலங்கள் பொது மக்களின் சேமிப்பு பழக்கத்தை ஊக்குவிக்க பல முதலீட்டு திட்டங்களை வழங்கி வருகிறது. இந்த திட்டங்களில் வங்கிகளுக்கு இணையாக வட்டியும் வழங்கப்படுகிறது. வைப்பு நிதி, தொடர் வைப்பு கணக்கு, கால வைப்புக் கணக்கு, முதியோருக்கான சேமிப்புத் திட்டம், மாதாந்திர வருமானத் திட்டம், பெண் குழந்தைகளுக்கான செல்வமகள் சேமிப்பு உள்ளிட்ட பல திட்டங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. மேற்கொண்ட பயனுள்ள திட்டங்களில் சேர விரும்புவோர் அஞ்சலத்தில் கணக்கு தொடங்குவது அவசியம்.

தமிழகத்தில் டிச.15 முதல் அமலுக்கு வரும் புதிய ஊரடங்கு கட்டுப்பாடுகள் – முழு விபரம் இதோ!

முன்பெல்லாம் கணக்கு தொடங்க உரிய ஆவணங்களுடன் கணக்கு தொடங்கவுள்ள நபர் நேரடியாக அஞ்சல் நிலையத்திற்கு செல்ல வேண்டும். ஆனால் தற்போது எங்கும் செல்லாமல் எளிதாக வீட்டிலிருந்தே கணக்கு தொடங்கலாம். அதன்படி IPPB என்ற செயலியை கூகுள் பிளே ஸ்டோரில் டவுன்லோட் செய்து அதன் மூலம் அஞ்சலக கணக்கை தொடங்கலாம். இதற்கு பான் மற்றும் ஆதார் உள்ளிட்ட அடையாள ஆவணங்கள் தேவை. வங்கிகளை போல அஞ்சலகத்தில் மொபைல் பேங்கிங் வசதி உள்ளது.

ஆன்லைன் மூலம் அஞ்சல் கணக்கு தொடங்கும் முறைகள்:
  • IPPB என்ற செயலியை பதிவிறக்கம் செய்து அதில் ஓபன் அக்கவுண்ட் என்ற ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும்.
  • அடுத்த கட்டமாக உங்கள் ஆதார் விவரங்கள் கேட்கப்படும். உங்கள் ஆதார் எண்ணுடன் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணிற்கு ஒடிபி வரும்.

இந்தியாவில் 44 பேருக்கு ஓமைக்ரான் கொரோனா தொற்று உறுதி – பொதுமக்கள் அச்சம்!

  • OTP எண்னை பதிவிட்டு அடுத்து வரும் பக்கத்தில் பெயர், முகவரி, நாமினி உள்ளிட்ட விவரங்களை பதிவிட வேண்டும். பிறகு உங்கள் அக்கவுண்ட் ஓபன் ஆகி விடும்.
  • மேலும் கணக்கு துவங்கிய ஒரு வருடத்திற்குள், நீங்கள் நேரடியாக சென்று பயோமெட்ரிக் முறையில் பதிவு செய்து கொள்ள வேண்டும்.
Post Office அக்கவுண்டில் மொபைல் பேங்கிங் வசதி:

https://www.indiapost.gov.in/vas/Pages/IndiaPostHome.aspx என்ற இணையத்தளத்தில் India Post Payments Bank என்பதை கிளிக் செய்ய வேண்டும். அதில் services ஆப்ஷனுக்கு செல்ல வேண்டும். இந்த ஆன்லைன் பேங்கிங் சேவையில் கேஒய்சி விவரங்களை கொடுக்க வேண்டும்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!