தமிழகத்தில் 10ம் வகுப்பு முடித்தவர்களுக்கு அஞ்சல் துறையில் வேலைவாய்ப்பு – விண்ணப்பங்கள் வரவேற்பு!

0
தமிழகத்தில் 10ம் வகுப்பு முடித்தவர்களுக்கு அஞ்சல் துறையில் வேலைவாய்ப்பு - விண்ணப்பங்கள் வரவேற்பு!
தமிழகத்தில் 10ம் வகுப்பு முடித்தவர்களுக்கு அஞ்சல் துறையில் வேலைவாய்ப்பு - விண்ணப்பங்கள் வரவேற்பு!
தமிழகத்தில் 10ம் வகுப்பு முடித்தவர்களுக்கு அஞ்சல் துறையில் வேலைவாய்ப்பு – விண்ணப்பங்கள் வரவேற்பு!

காரைக்குடி அஞ்சல் கோட்டத்தில் அஞ்சல் ஆயுள் காப்பீடு மற்றும் கிராமிய அஞ்சல் ஆயுள் காப்பீடு நேரடி முகவராக பணிபுரிய விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இப்பணிக்கு எப்படி விண்ணப்பிப்பது என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.

வேலைவாய்ப்பு அறிவிப்பு:

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு காரணமாக கடந்த 2 வருடங்களாக வேலைவாய்ப்பின்மை அதிகரித்தது. தற்போது நோய் தொற்று குறைந்து வருவதால் மீண்டும் அரசு மற்றும் அரசு சார்ந்த வேலைவாய்ப்பு அறிவிப்புகள் வெளியாகி வருகிறது. இந்த வகையில் செவ்வாய்க்கிழமை அன்று, காரைக்குடி கோட்டத்தில் அஞ்சல் ஆயுள் காப்பீடு மற்றும் கிராமிய அஞ்சல் ஆயுள் காப்பீட்டு நேரடி முகவா் சோ்க்கை அறிவிப்பை காரைக்குடி கோட்ட அஞ்சலக கண்காணிப்பாளா் பி. ஹுசைன் அகமது வெளியிட்டுள்ளார்.

தமிழகத்தின் 8 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு – சென்னை வானிலை மையம் அறிக்கை!

இந்த அறிவிப்பு வேலை தேடிக் கொண்டு இருப்பவர்கள், சுயதொழில் செய்பவர்கள், அங்கன்வாடி பணியாளர்கள், முன்னாள் ராணுவத்தினா், மகளிர் மேம்பாட்டு ஊழியர்கள், ஓய்வு பெற்ற ஆசிரியர்கள் மற்றும் ஓய்வு பெற்ற மத்திய, மாநில அரசு அலுவலர்கள் மற்றும் தகுதி உள்ளவர்கள் இந்த முகவர் பணிக்கு விண்ணப்பிக்கலாம்.

பணியின் பெயர்: அஞ்சல் ஆயுள் காப்பீடு மற்றும் கிராமிய அஞ்சல் ஆயுள் காப்பீடு நேரடி முகவர்

விண்ணப்பதாரர் தகுதி : 10 ஆம் வகுப்பு தோ்ச்சி

விண்ணப்பதாரர் வயது வரம்பு: 18 முதல் 50 வரை

இப்பணிக்கு தோ்ந்தெடுக்கப்படுவோருக்கு அவா்கள் செய்யும் வணிகத்துக்கு ஏற்ப ஊக்கத்தொகை மட்டுமே வழங்கப்படும். மேலும் தோ்வு செய்யப்படுபவா் ரூ.5 ஆயிரத்திற்கு எஎஸ்சி அல்லது கேவிபி பத்திரத்தை இந்திய ஜனாதிபதிக்கு ஈடு செய்து சமா்ப்பிக்கவேண்டும். அவர்கள் உரிமம் முடியும் போது பத்திரம் திருப்பித் தரப்படும்.

விண்ணப்பிக்கும் முறை : விண்ணப்பங்களை அருகிலுள்ள அஞ்சலகங்களில் பெறலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்துடன் பான் அட்டை, ஆதார் அட்டை, முகவரி சான்று, கல்விச்சான்றுகளின் நகல்களை இணைத்து அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர், காரைக்குடி கோட்டம், காரைக்குடி – 630003 என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

விண்ணப்பம் வந்து சேர வேண்டிய கடைசி நாள்: 22.02.2022.
மேலும் விவரங்களுக்கு 04565 – 224548 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என்று அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here