தமிழக Post office இல் ஆயுள் காப்பீடு முகவர் வேலை, 10ம் வகுப்பு போதும் – டிச.27ம் தேதி கடைசி நாள்!

0
தமிழக Post office இல் ஆயுள் காப்பீடு முகவர் வேலை, 10ம் வகுப்பு போதும் - டிச.27ம் தேதி கடைசி நாள்!
தமிழக Post office இல் ஆயுள் காப்பீடு முகவர் வேலை, 10ம் வகுப்பு போதும் - டிச.27ம் தேதி கடைசி நாள்!
தமிழக Post office இல் ஆயுள் காப்பீடு முகவர் வேலை, 10ம் வகுப்பு போதும் – டிச.27ம் தேதி கடைசி நாள்!

கோவில்பட்டி அஞ்சல் கோட்டத்தில் காப்பீடு முகவர் பணிக்கு காலிப்பணியிடங்களை நிரப்ப அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது. இதற்கு வருகிற 27 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்று கோவில்பட்டி கோட்ட முதுநிலை அஞ்சலகக் கோட்ட கண்காணிப்பாளர் திவ்யா சந்திரன் அவர்கள் அறிவித்துள்ளார்.

ஆயுள் காப்பீடு முகவர்:

கொரோனா பரவல் தற்போது குறைந்துள்ளதை அடுத்து பல்வேறு அரசு அலுவலகங்களில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்ப அரசு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதனை தொடர்ந்து கோவில்பட்டி அஞ்சல் கோட்டத்தில் கிராமிய அஞ்சல் ஆயுள் காப்பீடு முகவா் பணிக்கு காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக கோவில்பட்டி கோட்ட முதுநிலை அஞ்சலகக் கோட்ட கண்காணிப்பாளர் திவ்யா சந்திரன் அவர்கள் தகவல்கள் தெரிவித்துள்ளார். இதற்கான வயது வரம்பு 50 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும். மேலும் 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவராகவும் அல்லது அதற்கு நிகரான மத்திய, மாநில அரசுகளால் அங்கீகரிக்கப்பட்ட வாரியத்தால் நடத்தப்பட்ட தோ்வுகளில் தோ்ச்சி பெற்றவராகவும் இருத்தல் வேண்டும்.

இரவு ஊரடங்கு & 144 தடை உத்தரவு – மாநிலங்களின் ஒமிக்ரான் வைரஸ் தடுப்பு கட்டுப்பாடுகள்! முழு விவரம் இதோ!

இப்பணிக்கு தகுதியான நபர்கள் நேர்முகத் தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவார்கள். இதற்கு விண்ணப்பிக்க விருப்பம் உள்ளவர்கள் வேலைவாய்ப்பற்றவர்களாகவோ அல்லது சுயதொழில் செய்பவர்களாகவோ இருக்கலாம். அத்துடன் முன்னாள் ஆலோசகர்கள், முன்னாள் ஆயுள் காப்பீட்டு முகவர்கள், முன்னாள் ராணுவத்தினா், அங்கன்வாடி, மகிளா மண்டல பணியாளர்கள், ஓய்வு பெற்ற பள்ளி ஆசிரியா்கள், சுய உதவிக் குழுக்களில் செயல்படுவோர், கிராம தலைவர், கிராம சபை உறுப்பினர்கள் போன்றவர்களும் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம்.

சென்னை பல்கலைக்கழகத்தில் 117 பேரின் தேர்வு முடிவுகள் ரத்து – மெகா மோசடி அம்பலம்!

மேலும் காப்பீடு முகவர்களுக்கான கமிஷன் தொகையானது பாலிசியின் பிரீமியம் அடிப்படையில் வழங்கப்படும். இப்பணிக்கு தேர்வு செய்யப்படுவர்கள் காப்பீட்டு தொகையாக 5000 ரூபாயை தேசிய சேமிப்பு பத்திரம் அல்லது கிசான் விகாஸ் பத்திர வடிவில் அஞ்சல் அலுவலகத்தில் செலுத்த வேண்டும். இந்த தொகையை இவர்களின் ஏஜென்சி காலம் முடியும் போது வட்டியுடன் திருப்பி கொடுக்கப்படும். இப்பணியில் சேர விருப்பம் உள்ளவர்கள் விண்ணப்பங்களை அஞ்சல் நிலையத்தில் பெற்று பூர்த்தி செய்து முதுநிலை அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் கோவில்பட்டி 627851 என்ற முகவரிக்கு வருகிற 27ம் தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here