Post Office NSC சேமிப்பு திட்டம் – 5 ஆண்டுகளில் ரூ.7 லட்சம் வரை ரிட்டன்ஸ்! முழு விபரம் இதோ!

0
Post Office NSC சேமிப்பு திட்டம் - 5 ஆண்டுகளில் ரூ.7 லட்சம் வரை ரிட்டன்ஸ்! முழு விபரம் இதோ!
Post Office NSC சேமிப்பு திட்டம் - 5 ஆண்டுகளில் ரூ.7 லட்சம் வரை ரிட்டன்ஸ்! முழு விபரம் இதோ!
Post Office NSC சேமிப்பு திட்டம் – 5 ஆண்டுகளில் ரூ.7 லட்சம் வரை ரிட்டன்ஸ்! முழு விபரம் இதோ!

போஸ்ட் ஆபீஸில் பல முதலீடு திட்டங்கள் உள்ளன. இதன் மூலம் அதிக அளவு லாபங்களை வாடிக்கையாளர்கள் பெறுகின்றனர். இந்நிலையில் போஸ்ட் ஆபீஸின் NSC சேமிப்பு திட்டத்தின் முழு விபரங்களை இப்பதிவில் காணலாம்.

National Savings Certificate scheme:

கொரோனா பெருந்தொற்று காரணமாக பெரும் இழப்புகளை மக்கள் சந்தித்து வந்தனர். இதனால் மக்கள் தற்போது பல்வேறு திட்டங்களில் தங்களின் முதலீட்டை செலுத்த துவங்கியுள்ளனர். பெரும்பாலும் அதிக வருவாய் தரும் முதலீட்டுத் திட்டங்களை இந்திய அஞ்சல் துறை வழங்கி வருகிறது. மேலும் குறைவான முதலீட்டை கொண்ட திட்டங்களையும் வழங்குகிறது. இவ்வாறு குறைந்த முதலீட்டை கொண்ட திட்டம் தான் தேசிய சேமிப்பு சான்றிதழ் (National Savings Certificate) திட்டம். இந்த திட்டம் மக்கள் மத்தில் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது.

தமிழகத்தில் ஊரடங்கு அமல், போக்குவரத்துக்கு தடை? மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் விளக்கம்!

இந்த திட்டத்தில் முதலீடு செய்ய உச்ச வரம்பு ஏதும் கிடையாது. அதே போல் பிரிவு 80-சி இன் கீழ் வருமான வரி சலுகையும் பெற்றுத் தருகிறது. இந்த திட்டத்தில் முதலீடு செய்வதன் மூலம் 6.8% சதவீத வட்டி கிடைக்கிறது. அதாவது ரூ.1000 முதலீடாக செலுத்தும் போது 5 வருடங்களுக்கு பிறகு வட்டியுடன் சேர்த்து ரூ.1389 தொகை கிடைக்கிறது. மேலும் ரூ. 5 லட்சம் தேசிய சேமிப்பு திட்டத்தில் முதலீடு செய்தால் ஐந்து ஆண்டுகள் முடிவடையும் போது வட்டியுடன் சேர்த்து ரூ.6,94,746 தொகை கிடைக்கும். இந்த ஐந்து ஆண்டுகளில் முதலீட்டில் இருந்து கிடைக்கும் வருவாய் ரூ. 1,94,746 ஆகும்.

Zoho நிறுவனத்தில் பட்டதாரி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு – கல்வித்தகுதி, அனுபவம், தேர்வு விவரம் விளக்கம்!

இந்த திட்டத்தில் முதலீடு செய்வதற்கான ஆரம்ப தொகை ரூ .1000 ஆகும். இதற்கும் கீழ் உள்ள தொகையை வைத்து முதலீடு செய்ய கூடாது. இத்துடன் ஐந்து ஆண்டுகளில் இத்திட்டத்தின் மூலம் கிடைக்கும் வருவாயை மீண்டும் முதலீடு செய்து கூட பயன்பெறலாம். இதனால் சாதாரண மக்கள் கூட இந்த திட்டத்தின் மூலம் சிறந்த வருவாயை பெற முடியும். அதனால் தான் தேசிய சேமிப்பு சான்றிதழ் திட்டம் பொது மக்களிடம் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!