அஞ்சல் நிலையத்தில் கணக்கு வைத்திருப்பவர்கள் கவனத்திற்கு – முக்கிய அறிவிப்பு!

0
அஞ்சல் நிலையத்தில் கணக்கு வைத்திருப்பவர்கள் கவனத்திற்கு - முக்கிய அறிவிப்பு!
அஞ்சல் நிலையத்தில் கணக்கு வைத்திருப்பவர்கள் கவனத்திற்கு - முக்கிய அறிவிப்பு!
அஞ்சல் நிலையத்தில் கணக்கு வைத்திருப்பவர்கள் கவனத்திற்கு – முக்கிய அறிவிப்பு!

வங்கி மற்றும் அஞ்சல் நிலையங்களில் பணப்பரிவர்த்தனையில் பல்வேறு முறைகேடுகள் நடந்து வருவதாக குற்றசாட்டுகள் எழுந்து வருகிறது. இந்த வகையான முறைகேடுகளில் இருந்து வாடிக்கையாளர்களை பாதுகாப்பதற்காக அஞ்சல் நிலையம் புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

முக்கிய அறிவிப்பு:

இந்திய தபால் துறையானது பொதுமக்களின் சேமிப்பு பழக்கத்தை ஊக்குவிக்கும் விதமாக பல்வேறு சேமிப்பு திட்டங்களை அறிமுகப்படுத்தி வருகிறது. இந்த வகையில் அஞ்சல் சேமிப்பு திட்டங்கள் குறைவான ரிஸ்க் மற்றும் அதிக பாதுகாப்பு உடையதாகவும் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. இந்த வகையில் செல்வ மகள் சேமிப்பு கணக்கு, பொன் மகன் பொது வைப்பு நிதி, தொடர் வைப்புக் கணக்கு, கால வைப்புக் கணக்கு, முதியோருக்கான சேமிப்புத் திட்டம், மாதாந்திர வருமானத் திட்டம், தேசிய சேமிப்புப் பத்திரம் மற்றும் கிஸான் விகாஸ் பத்திரம் எனக் குழந்தைகள் முதல் மூத்த குடிமகன்கள் வரை அஞ்சல் துறையில் பல சேமிப்புத் திட்டங்கள் இருக்கின்றன.

ICC T20 உலகக்கோப்பை திருவிழா – ஐந்தே நிமிடத்தில் விற்றுத் தீர்ந்த IND vs PAK போட்டி டிக்கெட்டுகள்!

இந்நிலையில் அஞ்சல் நிலைய பணப்பரிவர்த்தனையில் ஏற்படும் ஒரு சில முறைகேடுகளை தடுப்பதற்கு ஒரு புதிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த அறிவிப்பு என்னவென்றால், அஞ்சல் நிலையத்தில் புதிதாக கணக்கு தொடங்குவார் செல்போன் எண்ணை இணைப்பது அவசியம் என அஞ்சல் துறை வலியுறுத்தியுள்ளது.

1. அஞ்சல் நிலைய வாடிக்கையாளர்கள் கணக்கு தொடங்கிய நாளில் இருந்து 6 மாதங்களுக்குள் பான்கார்டு எண்ணை சமர்ப்பிக்க வேண்டும். இல்லாவிட்டால் குறிப்பிட்ட கணக்கில் செயல்பாடுகள் பான் கார்டு எண் சமர்பிக்கும் வரை நிறுத்தி வைக்கப்படும்.

2. வாடிக்கையாளர்கள் 20 ஆயிரத்திற்கு மேல் பரிவர்த்தனை மேற்கொண்டால் செல்போன் எண்ணை தபால் நிலையங்கள் சரிபார்க்க வேண்டும்.

3.மேலும் ரூ.50 ஆயிரம் மற்றும் அதற்கு மேலான பரிவர்த்தனைகளுக்கு பான் கார்டு எண்ணை தபால் நிலையங்கள் சரிபார்க்க வேண்டும்.

4. இதனை தொடர்ந்து அஞ்சல் நிலையங்களில் செயல்பாட்டில் உள்ள அனைத்து கணக்குகளில் செல்போன் எண், பான் கார்டு எண் இணைக்கப்பட்டுள்ளதா என தபால் நிலையங்கள் கண்டிப்பாக உறுதி செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!