தமிழகத்தில் Post Office வேலைவாய்ப்பு – 63,000 வரை சம்பளம்! முழு விவரங்கள் இதோ!

2
தமிழகத்தில் Post Office வேலைவாய்ப்பு - 63,000 வரை சம்பளம்! முழு விவரங்கள் இதோ!
தமிழகத்தில் Post Office வேலைவாய்ப்பு - 63,000 வரை சம்பளம்! முழு விவரங்கள் இதோ!
தமிழகத்தில் Post Office வேலைவாய்ப்பு – 63,000 வரை சம்பளம்! முழு விவரங்கள் இதோ!

தமிழகத்தில், கோயம்புத்தூர் மாவட்டத்தில் அமைந்துள்ள இந்தியா போஸ்ட் மேலாளர் அலுவலகத்தில் காலியாக இருக்கும் பணியிடங்களுக்கு ஆட்சேர்ப்பு நடத்தப்பட இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பதவிக்கான காலியிட விவரங்கள், தகுதி குறித்த தகவல்களை இப்பதிவில் காணலாம்.

ஆட்சேர்ப்பு அறிவிப்பு

கோயம்புத்தூர் மாவட்டத்தில் அமைந்துள்ள இந்தியா போஸ்ட் மேலாளர் அலுவலகத்தில் 7வது ஊதியக் குழு அணி நிலையில் காலியாக இருக்கும் பணியிடங்களுக்கு ஆட்சேர்ப்பு அறிவிப்பை அஞ்சல் துறை தற்போது வெளியிட்டுள்ளது. அந்த வகையில் 7வது CPCன் படி 2021ம் ஆண்டிற்கான ஸ்டாஃப் கார் டிரைவர் பணியிடங்களுக்கு ஊதிய மேட்ரிக்ஸ் நிலை 2ன் படி புதியவர்களை நியமிக்க முன்மொழியப்பட்டுள்ளது. இந்த பதவிகளுக்கான காலியிட விவரங்கள், தகுதி, சம்பள விவரம் உள்ளிட்ட தகவல்கள் கீழே விரிவாக கொடுக்கப்பட்டுள்ளது.

Exams Daily Mobile App Download
காலியிட விவரங்கள்:
  • அஞ்சல் மோட்டார் சேவைகள் கோயம்புத்தூர் பிரிவு – 2
  • ஈரோடு பிரிவு – 1
  • நீலகிரி பிரிவு – 1
தகுதி:

விண்ணப்பதாரர்கள் வர்த்தக சோதனை அல்லது ஓட்டுநர் சோதனையின் அடிப்படையில் இலகுரக மற்றும் கனரக மோட்டார் வாகனங்களுக்கு செல்லுபடியாகும் ஓட்டுநர் உரிமம் பெற்றிருக்க வேண்டும்.

சம்பள விவரம்:

தேர்ந்தெடுக்கப்படும் விண்ணப்பதாரர்களுக்கு 7வது CPCன் படி மேட்ரிக்ஸ் நிலை 2 மற்றும் ஊதிய விதியின்படி ரூ.19,900 முதல் ரூ.63,200 வரை அளிக்கப்படும்.

தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்திற்கு 10 மாவட்டங்களில் மழை – வானிலை ஆய்வு மையம் தகவல்!

வயது வரம்புகள்:

விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயது வரம்பு 56 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.

விண்ணப்ப முறை:

இப்போது மேலே குறிப்பிட்ட தகுதிகளை கொண்டிருப்பவர்கள் தொடர்புடைய ஆவணங்களுடன் ஆகஸ்ட் 8 அன்று அல்லது அதற்கு முன் மேனேஜர், அஞ்சல் மோட்டார் சேவை, சரக்குக் கொட்டகை சாலை, கோயம்புத்தூர் 641001 என்ற முகவரிக்கு அனுப்பி வைக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

2 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!