தமிழக அஞ்சல் கோட்டத்தில் வேலைவாய்ப்பு – 10ம் வகுப்பு தேர்ச்சி போதும்! டிச.4 கடைசி நாள்!

0
தமிழக அஞ்சல் கோட்டத்தில் வேலைவாய்ப்பு - 10ம் வகுப்பு தேர்ச்சி போதும்! டிச.4 கடைசி நாள்!
தமிழக அஞ்சல் கோட்டத்தில் வேலைவாய்ப்பு - 10ம் வகுப்பு தேர்ச்சி போதும்! டிச.4 கடைசி நாள்!
தமிழக அஞ்சல் கோட்டத்தில் வேலைவாய்ப்பு – 10ம் வகுப்பு தேர்ச்சி போதும்! டிச.4 கடைசி நாள்!

தமிழகத்தில் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள அஞ்சல் அலுவலகத்தில் அஞ்சலக ஆயுள் காப்பீடு மற்றும் கிராமிய அஞ்சலக ஆயுள் காப்பீடு பிரிவில் நேரடி முகவர் பணியிடம் காலியாக உள்ளது. இப்பணியில் சேர விரும்புவோர் தங்களது விண்ணப்பங்களை அஞ்சல் அலுவலகத்திற்கு அனுப்பலாம் என்று தெரிவித்துள்ளது.

அஞ்சல் துறையில் வேலை:

தமிழகத்தில் அஞ்சல் துறையில் ஏராளமான வேலைவாய்ப்புகள் இருக்கின்றன. தற்போது சிவகங்கை மாவட்டத்தில் உள்ள அஞ்சல் அலுவலகத்தில் அஞ்சலக ஆயுள் காப்பீடு மற்றும் கிராமிய அஞ்சலக ஆயுள் காப்பீடு பிரிவில் நேரடி முகவர் பணியிடம் காலியாக உள்ளது. இப்பணியில் சேர விரும்புவோர் தங்களது விண்ணப்பங்களை அஞ்சல் அலுவலகத்திற்கு பதிவு தபால் அல்லது விரைவு தபால் மூலம் அனுப்பலாம் என்று சிவகங்கை அஞ்சலக கோட்ட கண்காணிப்பாளர் பி.ஹஜசைன் அகமது தெரிவித்துள்ள்ளார்.

டிசம்பரில் திருப்பதி செல்லும் பக்தர்கள் கவனத்திற்கு – தரிசன டிக்கெட் விநியோகம் துவக்கம்!

ஆகவே வேலை தேடுபவர்கள், அங்கன்வாடி பணியாளா்கள், முன்னாள் ராணுவத்தினா், மகளிா் மேம்பாட்டு ஊழியா்கள், ஓய்வு பெற்ற ஆசிரியா்கள் மற்றும் ஓய்வு பெற்ற மத்திய, மாநில அரசு அலுவலா்கள் ஆகியோர் தங்களின் விண்ணப்பங்களை விண்ணப்பிக்கலாம். மேலும் விண்ணப்பதாரர்கள் 18 வயதுக்கு மேற்பட்டவராகவும் மற்றும் 50 வயதுக்குள் உள்ளவராகவும் இருத்தல் வேண்டும். அத்துடன் 10 ஆம் வகுப்பு தேர்ச்சி அல்லது அதற்கும் மேல் படித்தவராகவும் இருத்தல் வேண்டும். தேர்ந்தெடுக்கப்படும் நபர்களுக்கு வணிகத்துக்கு ஏற்ப ஊக்கத்தொகை மட்டுமே வழங்கப்படும்.

தமிழக மருத்துவத் துறையில் புதிதாக 7,296 காலிப்பணியிடங்கள் – அரசாணை வெளியீடு!

இத்தகைய தகுதிகள் கொண்ட நபர்கள் தங்களது விண்ணப்பங்களை அருகே உள்ள அஞ்சல் அலுவலகத்தில் பெற்றுக் கொள்ள வேண்டும். அதன் பின் விண்ணப்பங்களை பூர்த்தி செய்து அத்துடன் பான் அட்டை, ஆதாா் அட்டை, முகவரி சான்றிதழ், கல்விச் சான்றிதழ் நகல்களை இணைத்து அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளா், சிவகங்கை கோட்டம், சிவகங்கை – 630 561 என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும். இதற்கான கடைசி நாள் வருகிற டிசம்பர் 4-ஆம் தேதி, அதற்குள் தங்களது விண்ணப்பங்களை பதிவு தபால் அல்லது விரைவு தபால் மூலம் அனுப்ப வேண்டும். மேலும் இது தொடர்பாக கூடுதல் விவரங்களை பெற 04575-245129 என்ற எண்ணிற்கு தொடர்பு கொள்ளலாம் என சிவகங்கை அஞ்சல் கோட்டம் தெரிவித்துள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!