தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வு நடத்த வேண்டும் – முதுகலை பட்டதாரி ஆசிரியர் கழகம்!!

2
தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வு நடத்த வேண்டும் - முதுகலை பட்டதாரி ஆசிரியர் கழகம்!!
தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வு நடத்த வேண்டும் - முதுகலை பட்டதாரி ஆசிரியர் கழகம்!!
தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வு நடத்த வேண்டும் – முதுகலை பட்டதாரி ஆசிரியர் கழகம்!!

தமிழகத்தில் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடத்த வேண்டும் என தமிழ்நாடு முதுகலை பட்டதாரி ஆசிரியர் கழகம் அரசை வலியுறுத்தியுள்ளது. தேர்வு நடத்த ஆசிரியர்கள் முழு ஒத்துழைப்பு அளிப்போம் எனவும் தெரிவித்துள்ளனர்.

பிளஸ் 2 தேர்வு:

தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக பள்ளிகளுக்கு அரசு விடுமுறை அளித்துள்ளது அரசு. தினசரி வகுப்புகள், தேர்வுகள் என அனைத்தும் கடந்த ஒரு வருடமாக ஆன்லைன் மூலமாகவே நடைபெற்று வருகிறது. கொரோனா பரவல் நிலையை பொறுத்தே பள்ளிகள் திறக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது. 2021ம் ஆண்டிற்கான புதிய கல்வியாண்டு ஜூன் 1 முதல் தொடங்கி விட்டது. இந்த நிலையில் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடைபெறாமல் உள்ளது. 1 முதல் 11 ஆம் வகுப்பு வரை தேர்வின்றி அனைவரும் தேர்ச்சி என்று அரசு அறிவித்துள்ளது.

TN Job “FB  Group” Join Now

ஆனால் 12ம் வகுப்புகளுக்கு தேர்வு அவசியம் என்பதால் தேதி குறிப்பிட்டமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. கொரோனா இரண்டாம் அலை அதிக பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இதனிடையே தேர்வு நடத்தினால் மாணவர்கள் பாதிக்கப்பட வாய்ப்பு உள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் பிளஸ் 2 தேர்வை நடத்த வேண்டுமா? வேண்டாமா? என பெற்றோர், ஆசிரியர், கல்வியாளரிடம் இணையவழியில் கருத்து கேட்பு நடைபெற்றது. இதை அறிக்கையாக அனுப்பி வைக்க மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கு அவசரமாக உத்தரவிடப்பட்டு உள்ளது.

கொரோனாவால் இறந்த ஊழியரின் குடும்பத்துக்கு 5 ஆண்டு ஊதியம் – ரிலையன்ஸ் அறிவிப்பு!!

மேலும் மத்திய அரசு சி.பி.எஸ்.இ., பிளஸ் 2 பொதுத்தேர்வை ரத்து செய்துள்ளது. ஆனால் நீட் தேர்வு குறித்து அறிவிப்பு இல்லை. அதை மத்திய அரசு நடத்த வாய்ப்பு உள்ளது என கல்வியாளர்கள் தெரிவித்துள்ளனர். கொரோனா பாதிப்பு குறைந்தவுடன் சற்று தாமதித்து, பாடத் திட்டம் மாற்றம், தேர்வு நேரம் குறைப்பு, பாதுகாப்பு நடவடிக்கைகள் உள்ளிட்ட சில மாற்றங்களுடன் தேர்வு நடத்த வேண்டும் என தமிழ்நாடு முதுகலை பட்டதாரி ஆசிரியர் கழகம் வலியுறுத்தியுள்ளது. மேலும் இதற்கு ஆசிரியர்கள் முழு ஒத்துழைப்பு அளிப்போம் என தெரிவித்துள்ளனர்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

2 COMMENTS

  1. நான் ஒரு 28 வயது பெண். 2008 ல்12ஆம் வகுப்பு கணிதம் பாடத்தில் தோல்வி அடைந்தது விட்டேன். அந்த நேரத்தில் எனது குடும்பம சூழ்நிலை காரணமாக வேலைக்கு செல்லும் நிலையில் நான் இருந்தேன். இப்போது படிப்பை தொடறுவதற்க்கான வசதி எனக்கு வந்து விட்டது. போன வருடம் கொரோனா காரணமாக என்னால் பரீட்சை எழுத முடியவில்லை. இப்போது கண்டிப்பாக நான் +2 பரீட்சை எழுத வேண்டும். எனக்கு மேல் நாட்டில் வேலை வாய்ப்பு கிடைத்துள்ளது. இதன் பின்னர் தான் எனது வருங்கால வாழ்க்கை, திருமண வாழ்க்கை அடங்கி உள்ளது. தயவு செய்து இந்த வருடமாவது 12 பரீட்சை வைக்க வேண்டும். என்னை போல இன்னும் படிப்பை பாதியிலேயே விட்டு மறுபடியும் தொடரநிறைய மாணவர்கள்.குறிப்பாக பெண்கள் காத்து கொண்டு இருக்கிறோம். தயவு செய்து மாநில முதல்வர் மற்றும் கல்வி அமைச்சர் எங்களின் வாழ்க்கை மற்றும் எதிர்காலத்தையும் மனதில் கொண்டு +2 பரீட்சை கண்டிப்பாக வைக்க வேண்டும் என்று தாழ்மையுடன் கேட்டுக் கொள்கின்றேன்,நன்றி.

  2. Nadantha venum Naa nenga poi eluthunha enga unga paya ponna anupunga papom velila summa sollanum ju sollinu okarathinga engaluku corona vanthu nenga porupu eythukuringala solunga nanga eluthuro enga uyiruku ethana aachina nenga porupu nu sign. Potu thanga nanga exam eluthuro

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!