சன் டிவியின் புதிய சீரியலில் களமிறங்கும் பிரபல நடிகர் இளவரசு – ரசிகர்கள் உற்சாகம்!

0
சன் டிவியின் புதிய சீரியலில் களமிறங்கும் பிரபல நடிகர் இளவரசு - ரசிகர்கள் உற்சாகம்!
சன் டிவியின் புதிய சீரியலில் களமிறங்கும் பிரபல நடிகர் இளவரசு - ரசிகர்கள் உற்சாகம்!
சன் டிவியின் புதிய சீரியலில் களமிறங்கும் பிரபல நடிகர் இளவரசு – ரசிகர்கள் உற்சாகம்!

சின்னத்திரையில் முன்னோடியாக இருக்கும் சன் டிவியில் ஒளிபரப்பாகி வந்த “பூவே உனக்காக” சீரியல் முடிவுக்கு வந்த நிலையில், தற்போது “செவ்வந்தி” என்ற புதிய சீரியல் தொடங்கப்பட இருக்கிறது. அதில் முன்னணி நடிகரான இளவரசு நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது

நடிகர் இளவரசு:

சன் டிவி சீரியல்கள் என்றாலே அந்த காலம் முதல் ரசிகர்கள் இருக்கின்றனர். தற்போது கால மாற்றத்திற்கு ஏற்றார் போல பல சீரியல்கள் ஒளிபரப்பாகி வருகிறது. மேலும் ஒவ்வொரு சீரியலும் பல எபிசோடுகளை கடந்து வெற்றிகரமாக ஒளிபரப்பாகி முடிந்த பின் அடுத்து அடுத்து புது சீரியல்களை புது கதையுடன் ஒளிபரப்பி வருகிறது. மேலும் புது சீரியல்களில் பிரபலமான நடிகர்களின் என்ட்ரி இருக்கும். அந்த வகையில் தற்போது “பூவே உனக்காக” சீரியல் முடிந்துள்ளது.

Exams Daily Mobile App Download

அந்த சீரியலுக்கு பதிலாக “செவ்வந்தி” என்ற புதிய சீரியல் தொடங்கப்பட இருக்கிறது. இந்த சீரியல் ஜூலை 4 ஆம் தேதி முதல் ஒளிபரப்பாக இருக்கிறது. இந்த சீரியல் குறித்த சில தகவல்கள் தற்போது வெளியாகி இருக்கிறது. அதில் இந்த சீரியலில் முன்னணி கதாபாத்திரத்தில் நடிகர் ராகவ் நடிக்க இருக்கிறார். அது மட்டுமில்லாமல் இந்த சீரியலில் முக்கிய ரோலில் முன்னணி ஒளிப்பதிவாளர் மற்றும் நடிகரான இளவரசு மற்றும் நடிகை வினோதனி ஆகியோர் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

விஜய் டிவி “ராஜா ராணி 2” சீரியலில் என்ட்ரி கொடுத்த பிரபல நடிகர் – ப்ரோமோ ரிலீஸ்!

நடிகர் இளவரசு 1994 ஆம் ஆண்டு வெளியான கருத்தம்மா படத்தில் படத்தில் ஒளிப்பதிவாளராக அறிமுகமானவர். அதன் பின் முதல் மரியாதை, முத்துக்கு முத்தாக , மாயாண்டி குடும்பத்தார். களவாணி, நெஞ்சுக்கு நீதி ஆகிய படங்களில் நடித்திருக்கிறார். மேலும் நடிகை வினோதினி ஓகே கண்மணி, அப்பா, ஆண்டவன் கட்டளை, ராட்சசன், கோமாளி, கேம் ஓவர், பொன்மகள் வந்தாள், மற்றும் சூரரைப் போற்று போன்ற படங்களில் நடித்திருக்கிறார்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!