சன் டிவியின் ‘பூவே உனக்காக’ சீரியல் – பல ட்விஸ்டுகளுடன் 1 மணிநேர சிறப்பு ஒளிபரப்பு!

0
சன் டிவியின் 'பூவே உனக்காக' சீரியல் - பல ட்விஸ்டுகளுடன் 1 மணிநேர சிறப்பு ஒளிபரப்பு!
சன் டிவியின் 'பூவே உனக்காக' சீரியல் - பல ட்விஸ்டுகளுடன் 1 மணிநேர சிறப்பு ஒளிபரப்பு!
சன் டிவியின் ‘பூவே உனக்காக’ சீரியல் – பல ட்விஸ்டுகளுடன் 1 மணிநேர சிறப்பு ஒளிபரப்பு!

சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் “பூவே உனக்காக” சீரியலின் லேட்டஸ்ட் ப்ரோமோ தற்போது வெளியாகி உள்ளது. அதன்படி வரும் ஞாயிற்றுக்கிழமை சிறப்பு எபிசோடாக இந்த சீரியல் ஒரு மணி நேரம் ஒளிபரப்பாக இருக்கிறது.

“பூவே உனக்காக” சீரியல்

சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சீரியல்கள் மக்கள் மத்தியில் பிரபலம். அந்த வகையில் தற்போது லேட்டஸ்ட் ஆக ஒளிபரப்பாகி வரும் சீரியல் தான் “பூவே உனக்காக”. இந்த சீரியலில் நாயகன் கதிர் மற்றும் நாயகி பூவரசி இருவரும் அன்புடன், அன்யோன்யமான தம்பதிகளாக வாழ்ந்து வந்தனர். ஆனால், பூவரசி கர்ப்பமானதில் கதிருக்கு சந்தேகம் ஏற்பட்டு விட்டது.

தமிழகத்தில் தொகுப்பூதிய ஆசிரியர்கள் பணி நிரந்தரம் – அமைச்சர் விளக்கம்!

இதனால் கதிர் DNA டெஸ்ட் எடுக்கிறார். அந்த ரிப்போர்ட்டை மஹேஸ்வரி மாற்றி வைத்து விடுவதால், கதிர் தனது சந்தேகத்தினை உறுதி செய்து கொள்கிறார். இதனால் கோபம் அடையும் பூவரசி தன்னை சந்தேகம் கொண்டதால் தனக்கு அப்படி ஒரு கணவனே தேவையில்லை என்று கூறி விடுகிறார். தற்போது இருவரும் பிரித்து வாழ்ந்து வருகின்றனர். கதிர் மகேஸ்வரியை கவனிக்க வேண்டும் என்ற காரணத்திற்காக அவரது போனில் சிப் வைத்து அவரை கண்காணிக்கிறார்.

இது எதுவுமே தெரியாமல் மகேஸ்வரி இருந்து வருகிறார். தற்போது அவரது போன் உடைந்து போனதால் அதனை சர்வீஸிற்கு கொடுக்கும் போது தனது போனில் யாரோ சிப் வைத்திருக்கின்றனர் என்பதை அறிந்து கொள்கிறார். இதனால் புது போன் மற்றும் சிம் வாங்கி கொள்கிறார். இப்படி பரபரப்பான காட்சிகளுடன் இந்த சீரியல் ஒளிபரப்பாகி வருகின்றது. இதனை தொடர்ந்து தற்போது இந்த சீரியலின் லேட்டஸ்ட் ப்ரோமோ ஒன்று வெளியாகி உள்ளது.

TN Job “FB  Group” Join Now

அதில் இந்த வாரம் ஞாயிற்றுக்கிழமை சிறப்பு எபிசோடாக 1 மணி நேரம் ஒளிபரப்பபட இருக்கிறதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் தனது குழந்தை காணாமல் போய் விட்டது என்று ஒருவர் பூவரசியிடம் கூறுகிறார். அதனை கேட்டு பூவரசி அதிர்ச்சி அடைந்து விடுகிறார். பின், ஒரு குழந்தையை காட்டுகின்றனர். அந்த குழந்தை தனது தந்தைக்கு போன் செய்து பணம் கொண்டு வந்து தரச் சொல்லி மிரட்டுராங்க என்று கூறுகிறது. இத்துடன் இந்த ப்ரோமோ முடிவடைந்து விடுகிறது.

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!