ஜீ தமிழ் ‘பூவே பூச்சூடவா’ ரேஷ்மா & மதன் திருமண டீசர் வீடியோ- குவியும் வாழ்த்துக்கள்!

0
ஜீ தமிழ் 'பூவே பூச்சூடவா' ரேஷ்மா & மதன் திருமண டீசர் வீடியோ- குவியும் வாழ்த்துக்கள்!
ஜீ தமிழ் 'பூவே பூச்சூடவா' ரேஷ்மா & மதன் திருமண டீசர் வீடியோ- குவியும் வாழ்த்துக்கள்!
ஜீ தமிழ் ‘பூவே பூச்சூடவா’ ரேஷ்மா & மதன் திருமண டீசர் வீடியோ- குவியும் வாழ்த்துக்கள்!

தமிழ் சின்னத்திரை சீரியல் நடிகர்கள் திருமண வரிசையில் ஜீ தமிழ் சேனல் ரேஷ்மா மற்றும் மதன் திருமணம் மிகவும் கோலாகலமாக கடந்த மாதம் நடந்தது. தற்போது ரேஷ்மா தனது திருமண வீடியோ டீசரை வெளியிட்டுள்ளார். இதற்கு ரசிகர்கள் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

ரேஷ்மா & மதன் திருமணம்:

பூவே பூச்சூடவா என்ற சீரியல் மூலம் சீரியல் நடிகையாக அறிமுகம் ஆனவர் ரேஷ்மா. இவர் ஒரு நடன நிகழ்ச்சியில் அறிமுகம் ஆன பின்னர், இவரின் திறமைக்கு கிடைத்த வாய்ப்பு தான் ஹீரோயின் வேடம். ஜீ தமிழில் இந்த சீரியல் கிட்டத்தட்ட 4 வருடங்கள் ஒளிபரப்பாகியது. இந்த சீரியல் மூலம் ரேஷ்மா மிகவும் பிரபலமாகிவிட்டார். இதே சீரியலில் நடித்து வந்த நிகழ்ச்சி தொகுப்பாளர் மதன் மற்றும் ரேஷ்மா இருவரும் காதலிக்கும் செய்தி சமூக ஊடகங்களில் பரவ தொடங்கியது. இதனை இவர்கள் இருவருமே ஒத்துக் கொண்டு தங்கள் காதலை அறிவித்தனர்.

விஜய் டிவி “பாக்கியலட்சுமி” சீரியல் ஆர்யன் உடனான பிரிவு? செம்பருத்தி ஷபானா கொடுத்த விளக்கம்!

இந்நிலையில், கடந்த நவம்பர் மாதம் 15ம் தேதி இவர்கள் திருமணம் மிகவும் விமரிசையாக நடந்தது. அதில், பல சின்னத்திரை நட்சத்திரங்களும் கலந்து கொண்டனர். இவர்கள் திருமணத்தில் நடந்த நிகழ்வுகள் அனைத்தும் உடனடியாக சமூக ஊடகங்களில் பதிவிடப்பட்டு வந்தது. அனைத்தும் ரசிகர்களால் மிகவும் ரசிக்கப்பட்டு ட்ரெண்டிங்கில் சென்றது. இவர்கள் திருமணம் முடிந்து இருவரும் எடுத்துக் கொண்ட புகைப்படங்களும் அவ்வப்போது வெளியிட்டு வந்தார்கள். ரேஷ்மா மற்றும் மதன் இருவரும் சேர்ந்து கலர்ஸ் தமிழ் டிவியில் தற்போது அபி டெய்லர் என்ற தொடரில் ஜோடியாக நடித்து வருகின்றனர்.

விஜய் டிவி ‘பிக்பாஸ்’ சீசன் 5 நிகழ்ச்சியில் ராஜுவிற்கு சர்பிரைஸ் கொடுத்த அம்மா – ப்ரோமோ ரிலீஸ்!

அந்த தொடரின் படப்பிடிப்புகளில் இருந்து எடுக்கப்பட்ட வீடியோ சமீபத்தில் வெளியாகியிருந்தது. திருமணம் முடிந்து 1 மாதம் கழிந்து விட்ட நிலையில், தற்போது அவர்கள் திருமண டீசரை ரேஷ்மா வெளியிட்டுள்ளார். இந்த வீடியோவை ரசிகர்களுக்காக வெளியிடுவதில் தான் பெரு மகிழ்ச்சி அடைவதாகவும் அதில், குறிப்பிட்டிருந்தார். திருமண சமயத்தில் எடுக்கப்பட்ட பல வீடியோக்களும் தொடர்ந்து வர இருப்பதாக கூறியுள்ளார். இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் அனைவரும் இவர்களின் திருமண வாழ்க்கைக்கான வாழ்த்தை தெரிவித்துள்ளனர்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!