சபரிமலை நடை இன்று முதல் திறப்பு – ஆனி மாத பூஜைகள் ஆரம்பம்!

0
சபரிமலை நடை இன்று முதல் திறப்பு - ஆனி மாத பூஜைகள் ஆரம்பம்!
சபரிமலை நடை இன்று முதல் திறப்பு - ஆனி மாத பூஜைகள் ஆரம்பம்!
சபரிமலை நடை இன்று முதல் திறப்பு – ஆனி மாத பூஜைகள் ஆரம்பம்!

கேரளாவிலுள்ள சபரிமலை ஐயப்பன் கோவிலில் ஆனி மாத பூஜைகளுக்காக இன்று (ஜூன் 14ம் தேதி) மாலை 5 மணிக்கு கோவில் நடை திறக்கப்படவுள்ளது. மேலும் இரவு 7:30 மணிக்கு நடை அடைக்கப்படும் என கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

சபரிமலை நடைதிறப்பு:

கேரளாவில் உள்ள சபரிமலை கோவிலில் ஆண்டுதோறும் ஏராளமான பக்தர்கள் ஐயப்பன் தரிசனத்திற்கு வருகை தருவார்கள். தற்போது கொரோனா பரவல் காரணமாக பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. நோய் பரவல் காரணமாக கூட்ட நெரிசலை தவிர்க்கும் வகையில் கோவில் நிர்வாகம் தாற்காலிகமாக பக்தர்கள் வருகையை நிறுத்தியுள்ளது . இந்திய அளவில் கொரோனா பாதிப்பில் கேரள மாநிலம் மூன்றாம் இடத்தில் உள்ளது. எனவே அங்கு அதிக கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.

CBSE 12ம் வகுப்பு மதிப்பீடு முறை இன்று வெளியீடு – கல்வி வாரியம் தகவல்!

சபரிமலையில் ஒவ்வொரு ஆண்டும் ஆனி மாதம் சிறப்பு பூஜைகள் நடைபெறும். இந்த வருடம் ஆனி மாத பூஜைகளுக்காக ஜூன் 14 ம் தேதி மாலை கோவில் நடை திறக்கப்படுகிறது. இன்று மாலை 5:00 மணிக்கு மேல்சாந்தி ஜெயராஜ் போற்றி நடை திறக்கப்பட்டு விளக்கேற்றப்படுகிறது. பின்பு இரவு 7 மணிக்கு நடை சாத்தப்படும் என கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

TN Job “FB  Group” Join Now

அதிகாலை 5 மணிக்கு மீண்டும் நடை திறக்கப்பட்டு தந்திரி கண்டரரு ராஜீவரரு அபிஷேகம் நடைபெறவுள்ளது. வழக்கமாக சபரிமலையில் கணபதி ஹோமம், உஷ பூஜை, உச்ச பூஜை, நடைபெறும். மாலையில் தீபாராதனை, அத்தாழ பூஜைகள் நடைபெற்று முடிந்தவுடன் இரவு 8 மணிக்கு நடை அடைக்கப்படும். இந்த ஆனி மாத பூஜைகளுக்காக 8 மணிக்கு பதிலாக 5 மணிக்கு நடை திறக்கப்படவுள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!