சபரிமலை ஐயப்பன் கோயிலில் பூஜைக் கட்டணம் உயர்வு – பக்தர்கள் அவதி!

0
சபரிமலை ஐயப்பன் கோயிலில் பூஜைக் கட்டணம் உயர்வு - பக்தர்கள் அவதி!
சபரிமலை ஐயப்பன் கோயிலில் பூஜைக் கட்டணம் உயர்வு - பக்தர்கள் அவதி!
சபரிமலை ஐயப்பன் கோயிலில் பூஜைக் கட்டணம் உயர்வு – பக்தர்கள் அவதி!

சபரிமலை ஐயப்பன் கோவிலில் பூஜைக் கட்டணம் முதல் அரவணை பாயசம், நெய் உள்ளிட்ட பிரசாதங்கள் வரை உள்ள அனைத்தின் விலையும் உயர்த்தப் போவதாக கோயில் நிர்வாகம் முடிவு செய்துள்ளது. மேலும், இந்த திட்டம் ஏப்ரல் 10 முதல் அமலுக்கு வரும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

பூஜைக் கட்டணம் உயர்வு:

கேரளா மாநிலத்தில் உள்ள புகழ் பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு கேரளா, தமிழ்நாடு, ஆந்திரா உள்ளிட்ட அண்டை மாநிலங்கள் மற்றும் பல மாநிலங்களில் இருந்து பக்தர்கள் வருவது வழக்கம். கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா தொற்றின் காரணமாக இந்தியாவில் உள்ள எந்த வழிபாட்டு தலங்களும் திறக்கப்படவில்லை. தற்போது கொரோனா பரவல் சற்று குறைந்துள்ளதால் மீண்டும் கோவில்கள் அனைத்தும் திறக்கப்பட்டு பக்தர்கள் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில் 1 முதல் 8ம் வகுப்பு மாணவர்களுக்கு சனிக்கிழமை விடுமுறை – அரசுக்கு கோரிக்கை!

இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு ஐயப்பன் கோவிலின் நடை திறக்கப்பட்டுள்ளதால் மற்ற ஆண்டுகளை விட இந்தாண்டு பக்தர்கள் அதிகமாக வந்து கொண்டிருக்கின்றனர். இந்நிலையில், ஐயப்பன் கோயிலில் பூஜைக் கட்டணம் முதல் அரவணை பாயசம், நெய் உள்ளிட்ட பிரசாதங்கள் வரை அனைத்தின் விலையையும் உயர்த்தப் போவதாக கோயில் நிர்வாகம் முடிவு செய்துள்ளது. மேலும், இந்த விலை உயர்வு ஏப்ரல் 10ஆம் தேதி முதல் அமலுக்கு வருவதாகவும் திருவிதாங்கூர் தேவசம் போர்டு தெரிவித்துள்ளது.

படி பூஜை கட்டணம் ரூ.1,15,000 லிருந்து ரூ.1,37,900 ஆகவும், சகஸ்ரகலசம் கட்டணம் ரூ.80,000 லிருந்து ரூ.91,250 ஆகவும், உதயாஸ்தமன பூஜை கட்டணம் ரூ.50,000 லிருந்து ரூ.61,800 ஆகவும், உற்சவபலி கட்டணம் ரூ.30,000 லிருந்து ரூ.37,500 ஆகவும், களபாபிஷேகம் கட்டணம் ரூ.22,500 லிருந்து ரூ.38,400 ஆகவும், தங்க அங்கி சார்த்துதல் கட்டணம் ரூ.10,000 லிருந்து ரூ.15,000 ஆகவும், புஷ்பாபிஷேகம் கட்டணம் ரூ.10,000லிருந்து ரூ.12,500 அகவையும், சதகலசம் கட்டணம் ரூ.10,000 லிருந்து ரூ.12,500 ஆகவும், அஷ்டாபிஷேகம் கட்டணம் ரூ.5,000 லிருந்து ரூ.6,000 ஆகவும், உச்ச பூஜை கட்டணம் ரூ.2,500 லிருந்து ரூ.3,000 ஆகவும், பகவதி சேவை கட்டணம் ரூ.2,000 லிருந்து ரூ.2,500 ஆகவும், உஷ பூஜை கட்டணம் ரூ.1,000 லிருந்து ரூ.1,500 ஆகவும், கணபதி ஹோமம் கட்டணம் ரூ.300 லிருந்து ரூ. 375 ஆகவும், கெட்டு நிறைத்தல் கட்டணம் ரூ.250 கட்டணம் ரூ.300 லிருந்து ஆகவும், அபிஷேக நெய்(100 மி.லி) கட்டணம் ரூ.75 லிருந்து ரூ.100 ஆகவும், நீராஞ்சனம் கட்டணம் ரூ.100 லிருந்து ரூ.125 ஆகவும், அரவணை கட்டணம் ரூ.80 லிருந்து ரூ.100 ஆகவும், அப்பம் (ஒரு பாக்கெட்) ரூ.35 லிருந்து ரூ.45 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!