தமிழக மக்களுக்கான பொங்கல் பரிசு, புதிய ஜாக்பாட் திட்டங்கள் – முதல்வர் முக ஸ்டாலின்!

1
தமிழக மக்களுக்கான பொங்கல் பரிசு, புதிய ஜாக்பாட் திட்டங்கள் - முதல்வர் முக ஸ்டாலின்!
தமிழக மக்களுக்கான பொங்கல் பரிசு, புதிய ஜாக்பாட் திட்டங்கள் - முதல்வர் முக ஸ்டாலின்!
தமிழக மக்களுக்கான பொங்கல் பரிசு, புதிய ஜாக்பாட் திட்டங்கள் – முதல்வர் முக ஸ்டாலின்!

தமிழகத்தில் நடந்து முடிந்த ஊரக உள்ளாட்சி தேர்தலில் திமுக அபார வெற்றியை பெற்றுள்ள நிலையில் மக்களுக்கு புதிய திட்டங்களின் மூலம் மகிழ்ச்சியளிக்க முதல்வர் முடிவு செய்திருப்பதாக அரசு தரப்பு வட்டாரங்கள் தெரிவித்துள்ளது.

ஜாக்பாட் திட்டங்கள்:

தமிழகத்தின் 9 மாவட்டங்களில் அக்டோபர் 6 மற்றும் 9 ம் தேதிகளில் இரண்டு கட்டமாக ஊரக உள்ளாட்சி தேர்தல் நடந்தது. இதற்கு 12ம் தேதி தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. அதன் முடிவில், திமுக கூட்டணி அமோக வெற்றி பெற்றுள்ளது. அதில், 140 மாவட்ட கவுன்சிலர் பதவிக்கு நடந்த தேர்தலில் 138 இடங்களிலும், 1,381 ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கான தேர்தலில் 1,027 இடங்களிலும், 74 ஊராட்சி ஒன்றியங்களில் அனைத்து ஒன்றியங்களையும் திமுக கூட்டணி வென்றுள்ளது. 5 ஆண்டுகளில் பெற வேண்டிய நம்பிக்கையை மக்கள் மத்தியில் 5 மாத ஆட்சியில் பெற்றது குறித்து மு.க.ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்தார்.

தமிழகத்தில் நவம்பர் 1ம் தேதி பள்ளிகள் திறப்பு கிடையாது – அமைச்சர் முக்கிய அறிவிப்பு!

இதற்காக தேர்தல் நடத்த பகுதிகளில் உள்ள தேர்தல் பொறுப்பாளர்களுக்கு தொலைபேசியில் அழைத்து வாழ்த்துக்களை தெரிவித்தார். இதே போன்ற வெற்றியை வரும் நகராட்சி தேர்தலிலும் பெற வேண்டும் என்று திமுக நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார். நகராட்சி தேர்தல் 2022 பிப்ரவரி மாதம் நடத்த திட்டமிடப்பட்டது. ஆனால் முன்னதாகவே நடத்த வேண்டும் என்று முதல்வர் கருதுவதாக தெரிகிறது. இதனால் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை டிசம்பர் மாதமே நடத்தி முடிக்க உரிய ஏற்பாடுகளை மேற்கொள்ளுமாறு தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் மற்றும் திமுக நிர்வாகிகளுக்கு முதல்வர் ஸ்டாலின் அதிரடியான உத்தரவு பிறப்பித்திருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.

ஊரக உள்ளாட்சி தேர்தலை போன்று நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலிலும் மாவட்ட செயலாளர்கள் மட்டத்திலேயே சீட்களை பங்கிட்டு கொள்ள முதல்வர் அனுமதி அளித்திருக்கிறார். இதனால் கூட்டணி கட்சிகளுக்கு மேல்சபையில் வாய்ப்பு வழங்க ஸ்டாலின் முடிவு செய்திருப்பதாக திமுக வட்டாரங்கள் கூறுகின்றது. தமிழகத்தில் மேல்சபையை கொண்டு வருவதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் முதல்வர் தொடங்கி உள்ளார். டிசம்பர் மாதம் சட்டமன்ற குளிர்கால கூட்டத்தொடரை நடத்தி, அதில் மேல்சபையை கொண்டு வருவதற்கான தீர்மானத்தை நிறைவேற்ற திட்டமிட்டிருப்பதாக கூறப்படுகிறது.

தமிழக ஊழியர்களுக்கு நிரந்தர பணி மற்றும் இலவச பஸ்பாஸ் – அமைச்சர் தகவல்!

கொரோனா பரவல் காரணமாகவும், கடந்த அதிமுக ஆட்சியின் மோசமான செயல்பாடுகளாலும் தற்போதைய திமுக அரசு கடும் நிதி நெருக்கடியில் தவித்து வருகிறது. இருப்பினும், உள்ளாட்சி தேர்தல் வெற்றியால் மிகுந்த உற்சாகத்தில் இருக்கும் முதல்வர் அனைத்து குடும்ப அட்டைகளுக்கும் 2022ம் ஆண்டு பொங்கல் பரிசு தொகையை வழங்க முடிவு செய்துள்ளதாகவும், குறிப்பாக ரொக்க பணமாக மக்களின் கையை சென்றடைய வேண்டும் என்பதில் முதல்வர் உறுதியாக இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

1 COMMENT

  1. என்ன சொல்ல வரீங்க தலைவரே மக்களுக்கு தெளிவா சொல்லுங்க

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!