ரூ.55,000/- சம்பளத்தில் அரசு வேலைவாய்ப்பு – விண்ணப்பிக்கலாம் வாங்க!
பாண்டிச்சேரி பல்கலைக்கழகம் சமீபத்தில் வெளியிட்ட அறிவிப்பில் காலியாக உள்ள பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டது. Research Scientist பணிக்கு என ஒதுக்கப்பட்டுள்ள பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக இந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் இறுதி நாளுக்குள் (11.07.2022) விண்ணப்பித்து பயன் பெறுமாறு கேட்டுக்கொள்கிறோம். விண்ணப்பிக்க தேவையான தகுதி, விண்ணப்பிக்கும் முறை போன்றவை எளிமையான முறையில் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
Pondicherry University வேலைவாய்ப்பு விவரங்கள்:
- Research Scientist பணிக்கு என ஒரே ஒரு (01) பணியிடம் மட்டும் பாண்டிச்சேரி பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
- இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற கல்லூரிகள் / பல்கலைக்கழகங்களில் பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவில் Ph.D பட்டம் பெற்றவராக மற்றும் Journals indexed in SCI ல் 5 papers வெளியிட்ட நபராக இருக்க வேண்டும்.
Exams Daily Mobile App Download
- விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற கல்லூரிகள் / பல்கலைக்கழகங்களில் Environmental engineering, Environmental science பாடப்பிரிவில் Master degree பெற்றவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- இந்த பல்கலைக்கழக பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் Sustainable Technology Development அல்லது Environmental Management போன்ற பணிக்கு தொடர்புடைய துறையில் ஆராய்ச்சி செய்த அனுபவம் உள்ளவராக இருக்க வேண்டும்.
- மேற்கண்ட பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்கள் மாதம் தோறும் ரூ.55,000/- ஊதியமாக பெறுவார்கள்.
TNPSC No.1 Coaching Center – Join Immediately
- இப்பணிக்கு தகுதி மற்றும் திறமை வாய்ந்த பணியாளர்கள் நேரடியாக 12.07.2022 அன்று நடைபெறும் நேர்காணல் வாயிலாக தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Pondicherry University விண்ணப்பிக்கும் முறை.
இந்த பல்கலைக்கழக பணிக்கு விண்ணப்பிக்க தகுதி மற்றும் திறமை உள்ள நபர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கூறப்பட்டுள்ளபடி தங்களது விண்ணப்பத்தை தயார் செய்து தேவையான ஆவணங்களை இணைத்து அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தபால் செய்ய வேண்டும். நாளை (11.07.2022) இப்பணிக்கு விண்ணப்பிக்க இறுதி நாள் என்பதால் விண்ணப்பதாரர்கள் இன்றே விண்ணப்பித்து பயன் பெறுமாறு கேட்டுக்கொள்கிறோம்.