பாண்டிச்சேரி பல்கலைக்கழகத்தில் தேர்வில்லாமல் ரூ.16,000/- சம்பளத்தில் வேலை!
பாண்டிச்சேரி பல்கலைக்கழகத்தில் Research Assistant எனப்படும் ஆராய்ச்சி உதவியாளர் பணியிடங்களுக்கு புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இப்பணிக்கு Ph.d/ M.Phil முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். இப்பணிக்கு தேர்வு செய்யப்படும் தேர்வர்க்கு மாதம் ரூ.16,000/- ஊதியம் வழங்கப்பட உள்ளது. எனவே ஆர்வமுள்ளவர்கள் 21.06.2023 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் | பாண்டிச்சேரி பல்கலைக்கழகம் |
பணியின் பெயர் | Research Assistant |
பணியிடங்கள் | 01 |
விண்ணப்பிக்க கடைசி தேதி | 21.06.2023 |
விண்ணப்பிக்கும் முறை | Offline |
ஆராய்ச்சி உதவியாளர் காலிப்பணியிடங்கள்:
Research Assistant எனப்படும் ஆராய்ச்சி உதவியாளர் பதவிக்கு என ஒரு பணியிடம் காலியாக உள்ளது.
கல்வி தகுதி:
அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் இருந்து குறைந்தபட்சம் 55% மதிப்பெண்களுடன் சமூக அறிவியலில் Ph.D/M.Phil/M.Com முடித்திருக்க வேண்டும்.
பல்கலைக்கழக சம்பள விவரம்:
மேற்கண்ட பணியிடங்களுக்கு தேர்வு செய்யப்படும் தேர்வர்க்கு மாதம் ரூ.16,000/- சம்பளம் வழங்கப்பட உள்ளது.
10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவரா? உதவித்தொகையுடன் உங்களுக்கான சூப்பர் வேலை இதோ!
ஆராய்ச்சி உதவியாளர் தேர்வு செயல் முறை:
விண்ணப்பதார்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர். நேர்காணல் பற்றிய விவரங்கள் மின்னஞ்சல் மூலம் தெரிவிக்கப்பட உள்ளது.
விண்ணப்பிக்கும் முறை:
தகுதியும் திறமையும் உள்ள விண்ணப்பதாரர்கள் தங்களது முழு விவரம் அடங்கிய Biodata வை 21.06.2023 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
Download Notification 2023 Pdf