ஜன.4-ல் பள்ளிகள் திறப்பு – மாநில அரசு அறிவிப்பு!!

0
ஜன.4-ல் பள்ளிகள் திறப்பு - மாநில அரசு அறிவிப்பு!!
ஜன.4-ல் பள்ளிகள் திறப்பு - மாநில அரசு அறிவிப்பு!!

ஜன.4-ல் பள்ளிகள் திறப்பு – மாநில அரசு அறிவிப்பு!!

கொரோனா பரவல் தாக்கம் குறைந்து வரும் நிலையில் தற்போது புதுச்சேரியில் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 4-தேதி முதல் 1 முதல் 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்போவதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கமலக்கண்ணன் தெரிவித்துள்ளார்.

பள்ளிகள் திறப்பு:

உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா பரவல் காரணமாக பள்ளிகள் கல்லூரிகள் திறக்கப்படாத நிலையில் தற்போது புதுசேரி அரசு பள்ளிகளை திறக்க அனுமதி அளித்துள்ளது. புதுசேரியில் நேற்று நிலவரப்படி 38 பேருக்கு கொரோனா பதித்த நிலையில் பாதிப்பு எண்ணிக்கை 37,750 ஆக அதிகரித்துள்ளது.

BANK
BANK

இந்நிலையில் பள்ளிகள் ஜனவரி 4-ஆம் தேதி முதல் திறக்கப்போவதாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதுகுறித்து புதுச்சேரி பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கமலக்கண்ணன் வெளியிட்ட அறிவிப்பில், “புதுவையில் வருகிற ஜனவரி 4 தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படும். ஆனால் அனைத்து மாணவர்களும் கட்டாயம் வர அவசியம் இல்லை எனவும், பள்ளிகள் தற்போதைய காலகட்டத்தில் வருகையை கணக்கிட தேவையில்லை எனவும், மத்திய அரசு வெளியிட்ட கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றி பள்ளிகள் திறக்கப்படும் என அறிவித்தார்.

சென்னை பல்கலையில் அரியர் தேர்வுகள் ! – மாணவர்கள் அதிர்ச்சி

தொடர்ந்து பேசிய அவர் பள்ளிகள் காலை 10 மணி முதல் 1 மணிவரை திறந்திருக்கலாம் எனவும், 1 முதல் 12 வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் தேர்வு நடைபெறும் எனவும் தெரிவித்தார். மேலும் ஜனவரி 10-க்கு பின் வகுப்புகள் 2 பிரிவுகளில் நடத்த ஏற்படு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.  இதனையடுத்து, கொரோனா பரவும் சூழ்நிலையை பொறுத்து மாணவர்களிடமும், பெற்றோர்களிடமும் ஆலோசனை நடத்திய பின்னர் ஜனவரி 18ம் தேதி முதல் பள்ளிகள் முழுவதுமாக செயல்பட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பள்ளிகள் திறந்த பிறகு கல்லூரிகள் திறப்பு குறித்து முடிவு செய்யப்படும் என அமைச்சர் கமலக்கண்ணன் தெரிவித்துள்ளார்.

வேலைவாய்ப்பு செய்திகள்

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!