ஒரே முதலீட்டில் உறுதியான மாத வருமானம் உங்கள் கையில் – என்ன பிளான்! எப்படி சேரலாம்!
குடிமக்கள் அனைவரும் நிலையான வருமானம் மற்றும் பாதுகாப்பான சேமிப்பு திட்டங்களை நோக்கி கவனம் செலுத்த தொடங்கியுள்ளனர். அந்த வகையில் ஒருமுறை முதலீட்டில் மாதா ந்திர வருமானம் அளிக்கும் அஞ்சலக திட்டம் குறித்து இப்பதிவில் பார்க்கலாம்.
மாதாந்திர வருமானம்:
மக்கள் எப்போதும் தாங்கள் சேமிக்கும் பணத்திற்கு நிலையான பாதுகாப்பையும், அதிக லாபத்தையும் எதிர்பார்க்கின்றனர். தனியார் நிறுவனங்களை காட்டிலும் அரசு மற்றும் அஞ்சலக சேமிப்பு திட்டங்களில் சேமிக்க நினைப்பதுதான் புத்திசாலித்தனமான திட்டமாக உள்ளது. மேலும் மாத வருமானம் பெற விரும்பும் நபர்களுக்கு அஞ்சல் அலுவலகம் மாதாந்திர வருமானத் திட்டம் ஒரு நல்ல பிளான் ஆக விளங்கி வருகிறது. இத்திட்டத்தில் நாடு முழுவதும் உள்ள எந்த தபால் நிலையத்திலும் உங்களது ஒருமுறை முதலீட்டை நீங்கள் செலுத்திக் கொள்ளலாம். தனிநபர் கணக்கிற்கு ரூபாய் 9 லட்சம் அதிகபட்சமாகவும், கூட்டு கணக்கிற்கு ரூபாய் 15 லட்சம் அதிகபட்ச தொகையாகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
பெண் வீரர்களுக்கு மகப்பேறு விடுப்பு – மத்திய அமைச்சர் ஒப்புதல்.. மத்திய அரசு அறிவிப்பு!
திட்டத்திற்கான முதலீட்டு காலம் ஐந்து ஆண்டுகள் ஆகும். மேலும் 7.40 % வட்டி விகிதம் ஆனது இத்திட்டத்திற்கு வழங்கப்படுகிறது. இதன்படி ரூபாய் ஒன்பது லட்சம் முதலீடு செய்துள்ள நபருக்கு மாதம் அவரது கணக்கிற்கு ரூபாய் 5550 வட்டி தொகையாக கிடைக்கும். இக்கணக்கிற்கான நாமினியை பயனர்கள் நியமித்துக் கொள்வதற்கும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மேலும் விருப்பத்தின் பேரில் முதிர்வு காலத்திற்குப் பிறகு மேலும் ஐந்து ஆண்டுகள் முதிர்வு காலத்தை நீட்டித்துக் கொள்வதற்கும் வசதிகள் கொடுக்கப்பட்டுள்ளது.