தமிழக அரசு வேலைவாய்ப்பு பெற விரும்பும் இளைஞர்கள் கவனத்திற்கு – போலீசார் எச்சரிக்கை!

0
தமிழக அரசு வேலைவாய்ப்பு பெற விரும்பும் இளைஞர்கள் கவனத்திற்கு - போலீசார் எச்சரிக்கை!
தமிழக அரசு வேலைவாய்ப்பு பெற விரும்பும் இளைஞர்கள் கவனத்திற்கு - போலீசார் எச்சரிக்கை!
தமிழக அரசு வேலைவாய்ப்பு பெற விரும்பும் இளைஞர்கள் கவனத்திற்கு – போலீசார் எச்சரிக்கை!

தமிழகத்தில் அரசு வேலை வாங்கித்தருவதாக கூறி பல்வேறு பண மோசடிகள் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் திருச்சி டோல்கேட்டில் வேலை வாங்கி தருவதாக கூறி 14 லட்சம் வரை மோசடி செய்த லோகேஷ் என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

போலீசாரால் கைது:

தமிழகத்தில் கடந்த 2 வருடங்களாக கொரோனா பாதிப்பால் அரசு மற்றும் அரசு சாரா வேலைவாய்ப்பு அறிவிப்புகள் அறிவிக்காமல் இருந்தது. இருப்பினும் தற்போது நோய் தொற்று குறைந்து வருவதால் மீண்டும் அறிவிப்புகள் வெளியாகி வருகிறது. அரசு வேலை என்பது பலரது வாழ்க்கை லட்சியங்களில் ஒன்றாகும். இந்த வகையில் அரசு வேலை கிடைப்பது என்பது எளிமை கிடையாது. அதற்கு பல்வேறு வழிமுறைகள் உள்ளது. இதனை தொடர்ந்து பல போட்டி தேர்வுகள் மூலம் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு அரசு பணியில் நியமிக்கப்படுகிறார்கள்.

தமிழகத்தில் 8ம் வகுப்பு முடித்தவர்களுக்கான வேலைவாய்ப்பு – விண்ணப்பிக்க 25ம் தேதி கடைசி நாள்!

ஆனால் ஒரு சிலர் அரசு வேலையை பண பலம் மற்றும் அதிகார பலம் மூலம் பெற்று விடலாம் என கருதி மோசடி கும்பலிடம் பணத்தை கொடுத்து ஏமாற்றம் அடைகின்றனர். மேலும் தமிழ்நாடு காவல்துறை சார்பில் பல்வேறு விழிப்புணர்வு பதிவு வெளியாகி வருகிறது. அப்பதிவில் “தமிழகத்தில் பல்வேறு இடங்களில் அரசு வேலை வாங்கி தருவதாக பலர் ஆசைவார்த்தை கூறி பணத்தை மோசடி செய்து வருகிறார்கள். அரசு வேலை என்பது முறையாக விண்ணப்பங்கள் அனுப்பப்பட்டு, தேர்வு அல்லது நேர்முக தேர்வு நடத்திய பிறகுதான் தேர்வு செய்வார்கள்”. ஆனால் ஒரு சிலர் அரசியலில் முக்கிய நபர்களை தனக்கு தெரியும், என்னால் அரசு வேலை வாங்கி தர முடியும், ஆனால் பணம் செலவாகும் என ஆசை வார்த்தைகளை பலரிடம் கூறி மோசடி செய்பவர்களிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளது.

SBI வங்கியில் ரூ.36 ஆயிரம் சம்பளத்தில் உதவி மேலாளர் வேலை – 48 காலிப்பணியிடங்கள்!

இந்த வகையில் ராமசந்திரன் பாலாம்பாள் தம்பதியின் மகனுக்கு அரசு வேலை வாங்குவதற்கு லோகேஷ் என்பவரை அணுகியுள்ளனர். அந்த லோகேஷ் பல்வேறு தவணையில் 14 லட்சம் பெற்றதாக கூறப்படுகிறது. மேலும் பணத்தை வாங்கி கொண்டு லோகேஷ் வேலை வாங்கி தரவில்லையாம். லோகேஷ் அளித்த ஆவணங்கள் அனைத்தும் போலியானது என அறிந்த பாலாம்பாள் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். மேலும் போலீசார் அறிவுரை படி மீதமுள்ள பணத்தை வாங்க நம்பர் 1 டோல்கேட் உத்தமர் கோவில் மேம்பாலத்திற்கு லோகேஷை வரவழைத்தார். அப்போது போலீசார் லோகேஷை கைது செய்தனர். லோகேஷ் அரசு பணியில் இருந்து பணி நீக்கம் செய்யப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!