தமிழகத்தில் ஆன்லைன் மூலமாக மது விற்பனை – போலீசார் விசாரணை!!

0
தமிழகத்தில் ஆன்லைன் மூலமாக மது விற்பனை - போலீசார் விசாரணை!!
தமிழகத்தில் ஆன்லைன் மூலமாக மது விற்பனை - போலீசார் விசாரணை!!
தமிழகத்தில் ஆன்லைன் மூலமாக மது விற்பனை – போலீசார் விசாரணை!!

தமிழகத்தில் முழு ஊரடங்கு காரணமாக மதுக்கடைகள் மூடப்பட்டுள்ளதால் வாட்ஸ்ஆப் மூலமாக மது விற்பனை நடைபெறுகிறது. இது குறித்து போலீசாரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

மது விற்பனை:

தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை தாக்கம் காரணமாக முழு ஊரடங்கு அமலில் உள்ளது. முழு ஊரடங்கின் போது அனைத்து கடைகளும் திறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் மதுக்கடைகளும் திறக்க அனுமதி இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் பிற மாநில எல்லைகளில் உள்ள மாவட்டங்களை சேர்ந்தவர்கள் ஆந்திரா, கார்நாடகா மாநிலங்களுக்கு சென்று மது வாங்கி வந்து அதனை அதிக விலைக்கு விற்பனை செய்கின்றனர்.

TN Job “FB  Group” Join Now

ssc

இதனால் எல்லையோர தமிழர்கள் ஏராளமான மதுபாட்டில்களை வாங்கிக் கொண்டு காட்டுப் பாதை வழியாகவும், பரிசல்கள் வழியாகவும் எடுத்து வருகின்றனர். இந்நிலையில் திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் 50க்கும் மேற்பட்ட பெயர்களில் வாட்ஸ்-அப் குழுக்களை உருவாக்கியுள்ளனர். அந்த குழு மூலமாக மது ஆன்லைன் மூலமாக விற்பனை செய்யப்படுகிறது. கூகுள்-பே, போன்-பே மூலமாக அதற்கான தொகை செலுத்தப்படுகிறது.

கொரோனா தாக்கத்தில் இருந்து விரைவில் மீளும் தமிழகம் – அமைச்சர் நம்பிக்கை!

அதன் பின்னர் அவர்கள் தெரிவித்த இடத்திற்கு சென்று ஆதாரத்தை காட்டி மதுபாட்டில்களை பெற்றுக் கொள்கின்றனர். மது விற்பனை கடந்த சில நாட்களாக சூடுபிடித்துள்ள நிலையில் போலீசாருக்கு புகார் சென்றுள்ளது. இது குறித்து உடனே வாணியம்பாடி போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர். அவர்கள் வாட்ஸ்அப் அட்மின், உரையாடல், குழு உறுப்பினர்கள் உள்ளிட்ட விவரங்களைச் சேகரித்து வருகின்றனர். விரைவில் சம்மந்தப்பட்டவர்கள் கைது செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!