வங்கி கணக்கு வைத்திருப்போருக்கு முக்கிய அறிவிப்பு – காவல் உதவி எண்கள் அறிவிப்பு!

0
வங்கி கணக்கு வைத்திருப்போருக்கு முக்கிய அறிவிப்பு - காவல் உதவி எண்கள் அறிவிப்பு!
வங்கி கணக்கு வைத்திருப்போருக்கு முக்கிய அறிவிப்பு - காவல் உதவி எண்கள் அறிவிப்பு!
வங்கி கணக்கு வைத்திருப்போருக்கு முக்கிய அறிவிப்பு – காவல் உதவி எண்கள் அறிவிப்பு!

தங்களின் வங்கி கணக்கில் இருந்து பணத்தை பல்வேறு வகைகளில் திருடப்பட்டு வருகிறது. இதனை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதனை தொடர்ந்து வங்கி கணக்கில் பணம் திருடப்பட்டு விட்டால் உடனடியாக புகார் தெரிவிக்கும் வகையில் இலவச தொலைபேசி எண் ஒன்றை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எல். பாலாஜி சரவணன் அறிவித்துள்ளார்.

இலவச தொலைபேசி எண்

வங்கிகளில் தற்போது டிஜிட்டல் முறையில் பணபரிவத்தனை நடைபெற்று வருகிறது. மேலும் ஆன்லைன் பண பரிவர்த்தனைகளில் OTP எண் முக்கியத்துவம் வகிக்கிறது. இந்த OTP எண் மட்டும் தெரிந்தாலே போதும் தங்களின் வங்கி கணக்கில் உள்ள பணம் முழுவதும் திருடப்பட்டுவிடும். மேலும் தற்போது மோசடிகளை நிகழ்த்த பல்வேறு உக்திகளை கையாண்டு வருகின்றனர். இதில் குறிப்பாக இணையதளத்தில் போலியான பல செயலிகளை உருவாக்கி உள்ளன. மேலும் வங்கி அதிகாரிகள் போன்று வாடிக்கையாளர்களுக்கு தொடர்பு கொண்டு இந்த போலியான செயலிகளை பதிவிறக்கம் செய்யுமாறு அறிவுறுத்துகின்றனர்.

வாடிக்கையாளர்களும் இதனை நம்பி பதிவிறக்கம் செய்து விடுகின்றனர். இந்த போலியான செயலியை பதிவிறக்கம் செய்தவுடன் உடனடியாக வாடிக்கையாளர்களின் மொபைலில் உள்ள தகவல்கள் திருடப்படுகிறது. இதன்மூலம் அவர்களின் வங்கி கணக்கில் உள்ள பணம் முழுவதும் திருடப்படுகிறது. அதனால் பல்வேறு வங்கிகள் தங்களின் வாடிக்கையாளர்களுக்கு இது போன்ற செயலிகளை பதிவிறக்கம் செய்ய அறிவுறுத்தவில்லை என்று எச்சரிக்கை செய்து வருகின்றனர். அத்துடன் வாடிக்கையாளர்கள் தங்களின் OTP நம்பர், CVV நம்பர், ATM நம்பர், ATM கார்டின் எக்ஸ்பைரி டேட் உள்ளிட்டவைகளை யாரிடமும் பகிர்ந்து கொள்ள கூடாது என்றும் எச்சரிக்கை செய்து வருகிறது.

ஓய்வூதியம் பெறுவோர் கவனத்திற்கு – LTA செலுத்துவதற்கு நாமினியை மாற்றலாம்! புதிய விதிகள்!

இதனை தொடர்ந்து தற்போது சைபர் குற்றங்கள் ஏற்பட்டால் அதனை காவல் நிலையத்துக்கு நேரில் சென்று புகார் அளிக்க தேவையில்லை. தற்போது இணையதளத்திலே புகார் அளிக்க வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இந்தப் புகார்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் இது குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எல். பாலாஜி சரவணன் கூறியதாவது, தங்களின் வங்கி பணம் ஓடிபி மூலமாக பணம் திருடப்பட்டாலோ அல்லது போலியான செயலிகளை பதிவிறக்கம் செய்து தங்களின் தகவல்கள் திருடப்பட்டு பணம் எடுக்கப்பட்டாலோ 24 மணி நேரத்தில் சைபர் குற்றப்பிரிவு அறிவித்துள்ள இலவச தொலைபேசி எண் 1930 எண்ணை தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம் என்று கூறியுள்ளார்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!