தமிழகத்தில் 5 நாட்களுக்கு ஊரடங்கு அமல் – பாதுகாப்பு பணியில் போலீசார் குவிப்பு!

0
தமிழகத்தில் 5 நாட்களுக்கு ஊரடங்கு அமல் - பாதுகாப்பு பணியில் போலீசார் குவிப்பு!
தமிழகத்தில் 5 நாட்களுக்கு ஊரடங்கு அமல் - பாதுகாப்பு பணியில் போலீசார் குவிப்பு!
தமிழகத்தில் 5 நாட்களுக்கு ஊரடங்கு அமல் – பாதுகாப்பு பணியில் போலீசார் குவிப்பு!

மயிலாடுதுறை வட்டம், பட்டவா்த்தி கிராமத்தில் அம்பேத்கர் உருவப்படம் தொடா்பாக, இரு சமூகத்தினரிடையே பிரச்சனை ஏற்படாமல் தடுக்கவும், பொது அமைதி, சமூக நல்லிணக்கத்தை காக்கும் விதமாக அப்பகுதியில் 5 நாட்களுக்கு 144 தடை உத்தரவு (ஊரடங்கு) பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் அந்த கிராமம் முழுவதும் வெறிச்சோடிக் காணப்பட்டது.மேலும் பாதுகாப்புக்காக போலீசார் குவிக்கப்பட்டனர்.

ஊரடங்கு அமல்:

பாபா சாகேப் என்றழைக்கப்படும் பீம்ராவ் ராம்ஜி அம்பேத்கர் 1891-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 14ம் தேதி மத்திய பிரதேச மாநிலம் அம்பாவாதே என்னும் கிராமத்தில் ராம்ஜி மாலோஜி சக்பால் – பீமாபாய் ஆகியோரின் 14-வது குழந்தையாகப் பிறந்தார். இந்திய விடுதலைக்குப் பின்னர் நாட்டின் முதலாவது சட்ட அமைச்சராகவும், உயர் கல்வி பெறுவதற்காக அமெரிக்கா சென்ற முதல் இந்தியர். தாழ்த்தப்பட்ட மக்களுக்கென கழகம் ஒன்றைத் தொடங்கியவர். பரோடா மன்னருடன் இணைந்து தீண்டாமை ஒழியப் போராடியவர். பொருளாதாரம், அரசியல், வரலாறு, தத்துவம், சட்டம் ஆகிய துறைகளில் தேர்ந்தவர்; ஆசிரியராகவும், இதழாளராகவும், எழுத்தாளராகவும் சமூகநீதிப் புரட்சியாளராகவும் விளங்கியவர்.

TN Job “FB  Group” Join Now

இவரது பிறந்த தினமான ஏப்ரல் 14-ம் தேதியை ஆண்டுதோறும் நாடு முழுவதும் சமூக நீதி தினமாக அனுசரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.நேற்று அம்பேத்கர் அவர்களின் பிறந்தநாள், நேற்றைய தினம் நாடு முழுவதும் அவரது உருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்து சிறப்பாக கொண்டாடப்பட்டது. மயிலாடுதுறை வட்டம்,பட்டவா்த்தி கிராமத்தில் அம்பேத்கர் உருவப்படம் தொடர்பாக எந்த பிரச்சனையும் வராமல் இருக்க ஏப்ரல் 13 காலை 6 மணி முதல் ஏப்ரல் 17-ஆம் தேதி நள்ளிரவு 12 மணி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த கிராமத்தில் கடந்த ஆண்டு டிசம்பர் 6ஆம் தேதி அண்ணல் அம்பேத்கர் நினைவு தினம் அன்று இரு சமூகத்தினர் இடையே பெரும் மோதல் ஏற்பட்டது. இந்நிலையில்,அம்பேத்கர் பிறந்தநாளை முன்னிட்டு ஏப்ரல்14( நேற்று ) இக்கிராமத்தில் அவரது உருவப் படத்தை வைத்து மரியாதை செலுத்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் அனுமதி கேட்டிருந்தனா்.

தீவிரமெடுக்கும் கொரோனா, மீண்டும் பள்ளிகள் மூடல் – மாநில அரசின் திடீர் உத்தரவு!

இதேநாளில் தலைஞாயிறு கிராமத்தில் உள்ள காத்தாயி அம்மன் கோவிலில் சித்ரா பௌர்ணமி உற்சவம் நடத்த அப்பகுதியில் வசிக்கும் மற்றொரு சமூகத்தினா் அனுமதி கேட்டிருந்தனா். இதனால் இரு சமூகத்தினர் இடையே பிரச்சனை ஏற்படும் என்பதால், அப்பகுதியில் ஏப்.13-ஆம் தேதியில் இருந்து 5 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தலைஞாயிறு மதகடி பகுதியிலிருந்து 1 கி.மீட்டா் சுற்றளவுக்கு 2 நபா்களுக்கு மேல் கூடிநிற்கக் கூடாது என உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. இதை தொடர்ந்து சிசிடிவி கேமரா அப்பகுதியில் பொருத்தப்பட்டு உள்ளது. மேலும் டிஎஸ்பி எம். வசந்தராஜ் தலைமையில் 100க்கும் அதிகமான போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். மேலும் பாதுகாப்பை பலப்படுத்த தஞ்சாவூரில் இருந்து வஜ்ர வாகனம் வரவழைக்கப்பட்டது. ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு உள்ளதால் அந்த பகுதி முழுவதும் மக்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடிக் காணப்படுகிறது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!